Published : 19 Apr 2023 06:17 AM
Last Updated : 19 Apr 2023 06:17 AM
சென்னை: மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ‘இந்து குழுமம்’சார்பில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதி 100-வது ஆண்டை நிறைவு செய்யஉள்ளது. இதையொட்டி 350 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஏப்.1-ம் தேதி மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் நிகழ்வு நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 100-ம்ஆண்டின் தொடக்க விழா மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் நேற்று நடைபெற்றது. தொடக்க விழாவை, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராக மகாதேசிகன் தொடங்கி வைத்தார். 100-வதுஆண்டு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு மாதமும் கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகள், இசை, நாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டது.
தொடக்க விழாவில் ‘தேசிக ஸந்தேசம்’ மாத இதழின் 6-ம்ஆண்டு சிறப்பு பதிப்பை ரங்கம்மத் ஆண்டவன் வராக மகாதேசிகன் வெளியிடமூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜர் சுவாமி பெற்றுக்கொண்டார். இந்த மாத இதழ் இலவசமாக பக்தர்களுக்கு கோயிலில் வழங்கப்படுகிறது.
நிகழ்வில் சிறப்பம்சமாக மூலவர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு வைரங்கள் பதித்த, தங்கத்திலான ‘சுவர்ண ஹஸ்தம்’ மற்றும் பதக்கம் ஆகியவற்றை சென்னையை சேர்ந்த கோமளவள்ளி-மாதவாச்சாரியார் குடும்பத்தினர், கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினர். இந்நிகழ்வில் தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள் ஆர்.ராகவன், ஆர்.அனந்தபத்மநாபன், ஆர்.முகுந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT