Published : 30 Jul 2022 02:04 AM
Last Updated : 30 Jul 2022 02:04 AM

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்: 10 ஆயிரம் பேர் தங்கி இளைப்பாறும் இடங்கள் அமைப்பு

30-ம் நாளில் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர்

கே.சுந்தரராமன்

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 30-ம் நாளில் அத்தி வரதர் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

அத்தி வரதரை காணவரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் அவர்கள் இளைப்பாறிச் செல்வதற்கான கொட்டகைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சயனக்கோலத்தில் இருந்ததைவிட நின்ற கோலத்தில் நிற்கும் அத்தி வரதரை காண்பதற்காக மேலும் அதிக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் அதிகரிக்கலாம். இதனால் பக்தர்கள் இளைப்பாறி செல்வதற்கு ஏற்ற வகையில் 10 ஆயிரம் பேரை அமர வைக்கும் வகையில் கொட்டகை அமைக்கப்படுகிறது.

அண்ணா அவென்யூ, வாழைத்தோப்பு ஆகிய இரு இடங்களில் இந்த கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அத்தி வரதர் தரிசனத்தையொட்டி அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திரள்வதால் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்கள் வருதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.

அமைச்சர் பெஞ்சமின் தரிசனம்

அத்தி வரதரை ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் தரிசனம் செய்தார். முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாகச் சென்ற அவருடன் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் சென்றனர்.


இதேபோல் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், திரைப்பட நடிகர் ஜெயராம் ஆகியோரும் தனித் தனியாக வந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x