Published : 17 Dec 2015 12:37 PM
Last Updated : 17 Dec 2015 12:37 PM

விட்டல் கோஷம் ஒலிக்கும் கோவிந்தபுரம்

விட்டல விட்டல என்கிற கோஷம் ஒலிக்கும்போதே நமக்குப் பண்டரிபுர பாண்டுரங்கனின் திவ்ய தரிசனம் கிடைத்துவிடும். அவதாரங்களில் கிருஷ்ணன் எளிமை. பாண்டுரங்கன் எளிமையிலும் எளிமை.

பாதேயம் புண்டரிகாட்சம், திவ்ய நாம சங்கீர்த்தனாமிர்தம் என்று கலிகாலத்தில் பாண்டுரங்கனின் விட்டல கோஷத்தை விட்டால் வேறு வழியில்லை.

இதை அறிந்த சில பக்தர்கள் தமிழகத்தில் சில பாண்டுரங்க ஆலயங்களை ஏற்படுத்தினர். அதில் சிறப்பு பெற்ற இரு ஆலயங்கள் இரண்டு. ஒன்று வந்தவாசிக்கு அருகில் தென்னாங்கூர். இன்னொன்று கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம். போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

இங்கு பிரம்ம  விட்டல் மகராஜ் இந்தக் கோயிலைக் கட்ட ஏற்பாடு செய்தார். 2003 டிசம்பரில் இந்த ஆலயபம் கட்டும் பணி துவங்கியது. பரனூர் மகாத்மா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் ஜூலை 15ம் தேதி 2011 குருபூர்ணிமா அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

5 ஆயிரம் பேர் அமர்ந்து வழிபாடு செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாண்டுரங்கன் ஆஸ்ரமம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பிரவேச துவார், மகாதுவார், வசந்த மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப கிரகம் ஆகிய பிரிவுகள் கோயிலில் உள்ளன. அழகான 729 சதுர அடி பரப்புள்ள கர்ப்பக்கிரகத்தில் உள்ள சலவைக்கல் மேடையில் ருக்மணி சமேத பாண்டுரங்கன் காட்சி தருகிறார். கருவறை விமானம் 40 அடி உயரத்திற்கு தளமும், அதன் மீது 92 அடி உயரத்திற்கு கோபுரமும் வட மாநில கட்டிட வேலைப்பாடுடன் கட்டப்பட்டு உள்ளது. வானுயர்ந்து நிற்கும் கொடியும் கோபுரமும் தரிசிக்க ஆனந்தம்! விட்டலன் கிருஷ்ணரின் அவதாரம்தான். எனவே இங்கு தினமும் கோ பூஜைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. பசுக்களையும் வளர்க்கின்றனர்.

இங்கு நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாண்டுரங்க அவதாரம் ஒரு பக்தனுக்காக எடுத்த அவதாரம். வடக்கே பண்டரிபுரத்தில் ஹரிதாசர் என்னும் பக்தர் வசித்து வந்தார். ஆரம்பத்தில் பெற்றோர் சொல் கேளாதவராக இருந்தார். பிறகு பாண்டுரங்கனின் நல்லருளால் மனம் திருந்தினார். தன் செயல்களுக்காக வருந்தினார். பெற்றோருக்கு சேவை செய்வதைத் தன் கடமையாகக் கொண்டார். அவன் போட்ட செங்கல்லின் மீது விட்டலன் இன்றும் காட்சி தருகிறான்.

ஆலய தரிசனம்

டிசம்பர் 2015

நிறுவனர்: சே.கோகுலாச்சாரி

ஆசிரியர்: சே.பூவராகன்

முகவரி: 25, செளராஷ்டிரா தெரு, புவனகிரி, தமிழ்நாடு.

தொடர்புக்கு: 04144 241975. விலை ரூ.20

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x