Published : 10 Apr 2014 03:39 PM
Last Updated : 10 Apr 2014 03:39 PM
நம் தமிழ்நாட்டுக் கோயில்களில் திருவிழா நாட்களில் சிலைகளுக்கு பூக்களாலும் மாலைகளாலும் அலங்கரித்து வீதி உலா வருவதைப் பார்க்கிறோம். ஆனால் தமிழ்நாட்டு சமணர் ஆலயங்களில் திருவிழா அலங்காரம் வித்தியாசமாக இருக்கும்.
ஒரு மரப்பீடத்தில் உற்சவரை வைத்து நவரத்தின கற்கள் போன்ற கண்ணாடிகள் பதித்த மரச்சட்டங்களைக் கொண்டு அலங்கரிப்பர். பார்ப்பதற்கு மிக அழகாக, பளபளப்பாக இருக்கும். பின் பஞ்சு பொதிகைகளை வைத்துக் கட்டி அழகாக்கி பூக்களாலும் மாலைகளாலும், மின் விளக்குகளாலும் மேலும் அழகுபடுத்துவர். பின்னர் தோள்களில் அல்லது வாகனங்களில் ஏற்றி உலா வருவார்கள். நவரத்தினக் கற்கள் ஒளிர பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக மிகச் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT