Published : 15 Mar 2017 01:01 PM
Last Updated : 15 Mar 2017 01:01 PM
திருவோணம்
மன உறுதியும், எதையும் கண்டு அஞ்சாமல் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடும் திருவோணம் நக்ஷத்திர அன்பர்களே, வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.
உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமாகி வேலையில் சேர்ந்துவிடுவார்கள்.
வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருந்தாலும் போட்டிகளை சந்திக்க நேரிடும். அதனால் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். கோபப்படும் தருணங்களைத் தவிர்க்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். மற்றபடி வெளிச் சந்தைகளை தேடிச் சென்று விற்பனையை விரிவு படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலிடம் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து முக்கியப் பணிகளைக் கொடுக்கும். தொண்டர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்களின் திட்டங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கட்சிப் பணிகளுக்காக சில புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். புதிய பாணியில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். சந்தர்ப்பங்களைத் தவற விடாமல் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு துறையில் வளர்ச்சி அடைவீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார், உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். தெய்வ பலம் அதிகரிக்கும். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். பண வரவு சீராகவே இருக்கும்.
மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். பாடங்களை மனப்பாடம் செய்து படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். மற்றபடி பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும். மரிக்கொழுந்து அல்லது துளசியை பெருமாளுக்குப் படையுங்கள்.
+ வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும்
- திடீர் பணதேவை ஏற்படலாம்
அவிட்டம்
அனுபவ அறிவும், செயல்திறனையும் பெற்ற அவிட்ட நக்ஷத்திர அன்பர்களே, உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேநேரம் அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாது. வியாபாரிகளுக்கு நல்லவர்கள் கூட்டாளிகளாக அமைவார்கள்.
வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக் கடன் என்று நினைத்திருந்தவை திரும்பி வந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். அதேநேரம் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். உங்களின் தனித் தன்மை வெளிப்படும். வியாபாரத்தை பெருக்க புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருந்தாலும் புதிய பொறுப்புகளைப் பெற முடியாது. அதேசமயம் உங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை திட்டமிட்டு செய்து வெற்றி பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு நன்றாகவே இருக்கும்.
கலைத்துறையினருக்கு புகழோடு பண வரவும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களின் பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள்.
பெண்மணிகள் தங்களின் எண்ணங்களை சிறப்புடன் செயல்படுத்துவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.
மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். மற்றபடி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு தொடர்ந்து நன்றாகவே இருக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் சனிஹோரையில் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். அரளி மலரை அம்மன் கோவிலுக்குப் படைக்கவும். அவளின் கிருபையால் உங்கள் தைரியம் அதிகரிக்கும்.
+ வாழ்க்கை தரம் உயரும்
- செலவு அதிகரிக்கும்.
சதயம்
வாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் மிக்க சதயம் நக்ஷத்திர அன்பர்களே, எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். சிலருக்கு புதிய உத்யோகம் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள் முனைப்புடன் வியாபாரம் செய்வீர்கள். லாப இலக்குகளை எட்டுவீர்கள். கூட்டாளிகளும், நண்பர்களும் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வார்கள். கடன் கொடுக்காமல் கறாராகப் பேசி வியாபாரத்தை விரிவுபடுத்தவும். மற்றபடி பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சிறிய அளவில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். அதேநேரம் உங்கள் வருமானத்தை கூறுபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும்.
அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். அதேநேரம் உங்கள் கட்சியினரிடமும், எதிர்கட்சியினரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனம் திருப்தி அடைவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களிடமிருந்து சிறுசிறு நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரசிகர்களின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர சகோதரி உறவில் இருந்த விரிசல்கள் மறைந்து உறவு சீர்படும். உடல் உபாதைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
மாணவமணிகள் முதலிடத்தைப் பெறுவீர்கள். பெற்றோருக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறுவீர்கள். விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: அருகிலிருக்கும் ஏதேனும் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். கொண்டைக்கடலை மாலையை உங்கள் கையால் கோர்த்து ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்குப் படைக்கவும். அவரின் அருளால் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
+ புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்
- அலைச்சல் இருக்கும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT