Published : 20 Nov 2014 11:53 AM
Last Updated : 20 Nov 2014 11:53 AM
முருகனின் முதல் தொண்டரான அகஸ்தியர் குறித்த கட்டுரை ஆழமான பொருள் உரைக்கிறது. அகஸ்தியரைத் தொடர்ந்து நக்கீரர், முசுகுந்தர், நல்லியக்கோடர், ஒளவையார், சேந்தனார், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர், குமரகுருபரர், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், பகழிக்கூத்தர், பாம்பன் சுவாமிகள், ராமலிங்க வள்ளலார், திருமுருக கிருபானந்தவாரியார் போன்ற எண்ணற்ற அடியார்களின் ஆச்சரியமான வாழ்க்கை வரலாறுகள் அழகிய பூச்செண்டு போல அமைக்கப்பட்டுள்ளன. முருகன் அருளால் வீணை பெற்ற கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதர் வாழ்க்கை வரலாறு குறித்த எழுத்தாக்கம் புத்தாக்கம்.
பிரபலமான கந்தர் சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராய சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்பட்டுள்ளது. ஒவ்வோர் அத்தியாயமும் தொண்டரின் பாடலுடன் தொடங்கி நற்றமிழில் விவரிக்கப்பட்டுள்ளது என்பது திண்ணம். இந்தப் புத்தகம் முருக பக்தர்களுக்கு வரப்பிரசாதம்.
புத்தகம்: முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்
ஆசிரியர்: வலையப்பேட்டை. ரா.கிருஷ்ணன்
பதிப்பு: விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
தொடர்புக்கு: 044 42634283 விலை: ரூ.150
- என்.ராஜேஸ்வரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT