Published : 02 Mar 2017 10:20 AM
Last Updated : 02 Mar 2017 10:20 AM
சிவ லிங்க ரூபத்தின் மீது சூரியக் கதிர்கள், நேராகப் படும் அற்புதம் சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடக்கிறது. இந்த இயற்கை நிகழ்வு மாசி மாதம் வளர்பிறையின் முன்பகுதியில் வரும். இவ்வாண்டு வெள்ளிக்கிழமை அதாவது மார்ச் 3 ம் தேதி வரை காலை 6 மணி முதல் 6.30 மணி வரை சூரியோதய நேரத்தில் சூரிய ஒளி ஈசன் மேல் படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சாந்தம் அளிக்க ஹோமம்
அயோத்தி மாநகரில் பிரார்த்தன் என்ற பக்தன் சிவ வேள்விக்காக இடம் தேடி அலைந்தபொழுது மயிலயம்பதியில் மல்லிகை வனத்தில் பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனி ஒன்று இருப்பதைக் கண்டார். மனதிற்கு சாந்தத்தை அளிக்கும் இடமாக இருப்பதை உணர்ந்து அங்கு மிக பிரம்மாண்ட அதிருத்ர ஹோமம் நடத்திட ஏற்பாடுகள் செய்தான்.
பிரார்த்தன் அதிருத்ர ஹோமம் செய்து கொண்டிருந்த நேர்த்தியைக் கண்ட இந்திரன், அதன் பலனாய் பிரார்த்தன் ஈசனின் அருளைப் பெற்றுவிடுவானோ என்று அஞ்சினான். இதன் காரணமாக இந்திரன், வேள்வியைக் கலைக்க எண்ணி மேனகையை அனுப்பினான். ஆனாலும் தொடர்ந்து அதிருத்ர ஹோமத்தை சிறப்புடன் நடத்தி முடித்தார் பிரார்த்தன்.
வேள்வியின் முடிவில் ஈசன் பிரார்த்தனின் கண்முன்னே தோன்றி அவருக்கு வேண்டிய வரம் அளித்தார். மேலும் மல்லிகை வனத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட சிவலிங்கத் திருமேனிக்கு மல்லீஸ்வரர் என்று தனக்குத் தானே பெயர் வைத்து இங்கு ஒரு சிவத்தலத்தைக் கட்டுவதற்கு ஆணையிட்டார். அன்று முதல் இத்தலத்தில் அருள்மிகு மல்லீஸ்வரர் எனும் பெயருடன் அருள்மிகு மரகதாம்பாள் அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலில் வீற்றிருக்கும் மரகதாம்பிகை உடனுறை மல்லீஸ்வரர் ஆலயம், மயிலாப்பூரில் உள்ள ஏழு சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
அருள்பாலிக்கும் காலபைரவர்
இக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரரை ஆறு திங்கட்கிழமை மல்லிகை மலர் சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். மக்கட்பேறு இல்லாதவர்கள் இக்கோயிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு ஆறுவார காலம் விரதம் இருந்தால் மக்கட்பேறு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
இக்கோயிலின் தலவிருட்சமாக மல்லிகைச் செடி மற்றும் அரசமரம் அமையப் பெற்றுள்ளது. 64 பைரவர்களில், ஒன்றான காலபைரவர் இத்திருக்கோயிலில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
வேள்வியின் முடிவில் ஈசன் பிரார்த்தனின் கண் முன்னே தோன்றி அவருக்கு வேண்டிய வரம் அளித்தார். மேலும் மல்லிகை வனத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட சிவலிங்கத் திருமேனிக்கு மல்லீஸ்வரர் என்று தனக்குத் தானே பெயர் வைத்து இங்கு ஒரு சிவத்தலத்தைக் கட்டுவதற்கு ஆணையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT