Published : 02 Jun 2016 04:52 PM
Last Updated : 02 Jun 2016 04:52 PM

வார ராசி பலன் 02-06-2016 முதல் 08-06-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரன், 11-ல் குரு; ராகு உலவுவது சிறப்பு. 3-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவது நல்லது. நல்லவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபாடு கூடும். மறைந்த, தொலைந்த பொருள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். பிற மொழி, மத, இனக்காரர்கள் உதவுவார்கள். 2-ல் வக்கிர செவ்வாயும்; வக்கிர சனியும், 8-ல் சூரியனும் உலவுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். வீண் வம்பு கூடாது. அரசுப் பணிகளில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 6, 8.

திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு, வடக்கு, தென் மேற்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், இள நீலம், பச்சை.

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: சூரிய வழிபாடு நலம் தரும். ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் புதனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குரு 10-ல் இருந்தாலும் 2, 4, 6-ம் இடங்களைப் பார்ப்பது நல்லது. 3-ம் தேதி முதல் புதன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. ராசிநாதன் வக்கிரம் பெற்று ஜன்ம ராசியில் வக்கிர சனியுடன் கூடியிருப்பதும் 4-ல் கேது உலவுவதும் குறை. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும். வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் கூடும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பொருளாதார நிலை சீராகவே இருக்கும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டு கொண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. பயணம் சார்ந்த இனங்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 5.

திசைகள்: தென் மேற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, வெண் சாம்பல் நிறம்.

எண்கள்: 4, 5.

பரிகாரம்: கந்த சஷ்டி, கவசம் படிப்பதும் கேட்பதும் நல்லது. விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். முயற்சி பலிக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வும் கிடைக்கும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் அனுகூலம் உண்டாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் உதவுவார்கள். 3-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். சுக்கிரன் பலம் குறைந்திருப்பதால் வாழ்க்கைத் துணை நலனுக்காகச் செலவு செய்ய வேண்டி வரும். கலைத் துறையினருக்குப் பிரச்சினைகள் சூழும். மாதர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 5, 6.

திசைகள்: வட மேற்கு, கிழக்கு, வட கிழக்கு.

நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு , பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 7.

பரிகாரம்: மகாலட்சுமிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும்; சனியும் உலவுவது சிறப்பு. நண்பர்களும் உறவினர்களும் உதவ முன்வருவார்கள். வியாபாரம் பெருகும். மாணவர்களது திறமை வெளிப்படும். கலைத் துறையினருக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். பெண்களின் எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

பெண்களால் அனுகூலம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். எதிரிகள் விலகுவார்கள். 3-ம் தேதி முதல் புதன் 5-ம் இடம் மாறினாலும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். 2-ல் கேதுவும், 8-ல் குருவும்; ராகுவும் இருப்பதால் குடும்ப நலனில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 5, 6, 8.

திசைகள்: மேற்கு, தென் கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம்: கணபதி, துர்க்கை ஜப ஹோமம் செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும்; சனியும் சஞ்சரிப்பதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மன உற்சாகம் பெருகும். சுப காரியங்கள் நிகழும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து; உபசாரங்களிலும் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய சொத்துகள் சேரும். வாகன யோகம் உண்டாகும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் உடன்பிறந்தவர்களாலும் நலம் ஏற்படும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் செழிப்புக் கூடும். 3-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவது விசேஷம். மாணவர்களது நிலை உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வரவேற்பு கூடும். புதிய பதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 5, 6, 8.

திசைகள்: மேற்கு, தெற்கு, தென் கிழக்கு, வட கிழக்கு.

நிறங்கள்:

நீலம், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்:3, 5, 6, 8, 9.

பரிகாரம்: நாக பூஜை செய்வது நல்லது.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் சூரியனும்; சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குரு 10, 12, 2-ம் இடங்களைப் பார்ப்பது நல்லது. குடும்ப நலம் சீராகும். பேச்சில் திறமை வெளிப்படும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். பெண்களின் நோக்கம் நிறைவேறும்.

பயணத்தால் நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். 3-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. மாணவர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. நண்பர்களாலும் உறவினர்களாலும் தொல்லைகள் அதிகரிக்கும். குரு பலம் குறைந்திருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: ஜூன் 2, 5, 6, 8.

திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, இளநீலம், புகைநிறம்.

எண்கள்: 1, 4, 6.

பரிகாரம்: மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x