Published : 16 Dec 2016 12:42 PM
Last Updated : 16 Dec 2016 12:42 PM

மார்கழி மாத நட்சத்திர பலன்கள் - பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

பூரட்டாதி:



தோல்விகளை வெற்றியின் படிகளாக கருதி எதை பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் மன உறுதி கொண்ட பூரட்டாதி நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.



தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது



நல்லது.



கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.



பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது.



கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.



அரசியல்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.



மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது.



பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.



+: வாக்குவன்மை அதிகரிக்கும்



-: விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம்



உத்திரட்டாதி:



ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் குணமுடைய உத்திரட்டாதி நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும்.



தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்.



குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.



பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.



கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சக கலைஞர்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் நன் மதிப்பை பெறுவீர்கள். நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து பாராட்டுக்கள் கிடைக்க



பெறுவீர்கள்.



அரசியல் துறையினருக்கு உயர் பதவிகள் கிடைக்க கூடும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள்.



மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.



பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும், சிவனையும் வணங்கி சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.



+: வாகன யோகம் ஏற்படும்



-: புதிய நபர்கள் மூலம் சில தேவையற்ற மனசஞ்சலம் ஏற்படலாம்



ரேவதி:



தம்மை போலவே மற்றவர்களும் காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் ரேவதி நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.



தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில்,



வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.



குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண் டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.



பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.



கலைத்துறையினருக்கு எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.



அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.



மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.



பரிகாரம்: ருத்ர ஜெபம் செய்வதும் குருவுக்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை



நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.



+: பதவி உயர்வு கிடைக்கும்



-: எடுக்கும் முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x