Published : 18 Sep 2014 01:24 PM
Last Updated : 18 Sep 2014 01:24 PM
திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோயிலில் மூலவிக்ரகம் முதலில் மரத்தால் செய்யப்பட்டது. விஷ்ணு பக்தரான ராஜா மார்த்தாண்ட வர்மா, 1729-ம் ஆண்டு கருவறையில் புதிய விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தார்.
இந்த விக்ரகம் 18 சாலிக்கிராம கற்களால் செய்யப்பட்டது. இந்தக் கோயில் 5 ஆயிரம் ஆண்டு சிறப்பு கொண்ட முதல் கோயில். பதிற்றுப்பத்து, சிலப்பதிகார நூல்களால் பேசப்பட்ட கோயில். 12 ஆயிரம் சாலிக்கிராம்கள் இணைந்த இந்தச் சிலையை தரிசித்தால் ஆயிரம் மஹாஷேத்திரங்களைத் தரிசித்த பலன் கிட்டும். இங்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும் தங்க விக்ரகம், உற்சவ வேளையில் அருள்பாலிக்கும் வெள்ளி விக்ரகம் இரண்டும் உண்டு. பத்மநாபஸ்வாமி கருவறையில் சிவன், விஷ்ணு, பிரம்மாவாக அருள்புரிகிறார்.
இங்குள்ள நரசிம்மர் சந்நிதியில் இரவில் சிம்ம கர்ஜனை கேட்பதாக நம்பப்படுகிறது. அனுமன் மேல் பூசப்படும் வெண்ணெய் மாதக் கணக்கில் (கோடை காலத்திலும்) உருகாமல் இருப்பது கண்கூடு. இங்கிருந்த ராமானுஜனை கருடர் திருக்குறுங்குடிக்கு அழைத்துச் சென்று மீண்டும் திருவனந்தபுரம் திரும்பவில்லை. அதனால் கருடன் சிலை இல்லாத பெருமாள் கோயில் இது என்பதும் இன்னும் ஒரு அதிசயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT