Last Updated : 17 Nov, 2025 06:05 AM

 

Published : 17 Nov 2025 06:05 AM
Last Updated : 17 Nov 2025 06:05 AM

மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு

சபரிமலை கோயிலில் மண்டல வழிபாட்டுக்காக நடையை திறந்து வைத்த மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி.

குமுளி: மண்டல வழி​பாட்​டுக்​காக நேற்று மாலை சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்​பட்​டது. அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் டிச. 27-ல் நடை​பெறும் மண்டல பூஜையை முன்​னிட்டு நேற்று மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. மேல்​சாந்தி அருண்​கு​மார் நம்​பூ​திரி தீபம் ஏற்​றி, மங்கல இசை முழங்க நடையைத் திறந்து வைத்​தார். பின்​னர், 18-ம் படி வழியே கீழிறங்கி ஆழிக்​குண்​டத்​தில் தீபம் ஏற்​றி​னார்.

அருண்​கு​மார் நம்​பூ​திரி​யின் பணிக்​காலம் இன்​றுடன் முடிவடைந்​த​தால், சபரிமலை மற்​றும் மாளி​கைபுரம் கோயில்​களுக்கு புதி​தாக தேர்வு செய்​யப்​பட்ட மேல்​சாந்​தி​கள் பிர​சாத் நம்​பூ​திரி, மனு நம்​பூ​திரி ஆகியோரை பொறுப்​பேற்​கச் செய்​யும் வகை​யில் அவர்​களின் கையைப் பிடித்து 18-ம்​படி வழியே சந்​நி​தானத்​துக்கு அழைத்து வந்​தார். அங்கு இரு​வருக்​கும் விபூ​திப் பிர​சாதம் வழங்​கப்​பட்​டது.

தொடர்ந்து தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு புதிய மேல்​சாந்​தி​கள் மீது புனித தீர்த்​தம் தெளித்து மூலமந்​திரத்தை உபதேசித்​து, பதவி ஏற்​கச் செய்​தார். இரு​வரும் ஓராண்​டுக்கு சபரிமலை​யிலேயே தங்கி வழி​பாடு​களை மேற்​கொள்​வார்​கள். பதவி​யேற்பு சடங்கு நிகழ்ச்​சிக்​குப் பிறகு கோயி​லில் வேறு வழி​பாடு​கள் இன்றி இரவு 11 மணிக்கு நடை சாத்​தப்​பட்​டது. இன்று அதி​காலை 3 மணிக்கு புதிய மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி கோயில் நடையை திறந்து வழி​பாடு​களை மேற்​கொள்ள உள்​ளார்.

மண்டல வழி​பாடு தொடங்​கியதை முன்​னிட்​டு, ஏராள​மான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் தர்ம சாஸ்​தாவை வழிபட்டு வரு​கின்​றனர். முதல் நாளான நேற்று ஆந்​தி​ரா, கர்​நாட​கா, தெலங்​கானா பக்​தர்​களின் வருகை அதி​கம் இருந்​தது. பிற்​பகலில் பம்​பை, எரிமேலி உள்​ளிட்ட பகு​தி​களில் பக்​தர்​களின் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. சத்​திரம், எரிமேலி, அழுதகடவு உள்​ளிட்ட வனப் பாதைகள் இன்று காலை 8 மணி முதல் திறக்​கப்பட உள்​ளன.

வன விலங்​கு​களுக்கு உணவு கொடுப்​ப​தோ, அதிக இரைச்​சலுடன் பயணிப்​பதோ கூடாது. வழி​யில் நீர் நிலைகளில் கவன​முடன் நீராட வேண்​டும். பக்​தர்​கள் பொது​வெளி​களை அசுத்​தம் செய்​யக் கூடாது. வனப் பாதையை விட்டு வில​கிச் செல்​லக் கூடாது என்று கேரள வனத் துறை​யினர் அறி​வுறுத்​தி​
உள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x