Published : 12 Nov 2025 06:49 AM
Last Updated : 12 Nov 2025 06:49 AM

பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி: ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது.

தொடர்ந்து 9 நாட்கள் வரை, அதாவது நவம்பர் மாதம் 25-ம் தேதி வரை பத்மாவதி தாயார் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு
வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையொட்டி, நேற்று வைகானச ஆகம விதிகளின்படி, கோயில் முழுவதும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம், பன்னீர் போன்றவற்றால் கருவறை உட்பட உப சன்னதிகள், கொடிக்கம்பம், பலிபீடம், விமான கோபுரம் என அனைத்து இடங்களிலும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம வல்லுனர்கள் கோயிலை சுத்தம் செய்தனர். அதன் பின்னர் நைவேத்தியம் படைத்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் மதியம் 12 மணிக்கு மேல் தாயாரை தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கா,திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர், எஸ்பி சுப்புராயுடு உட்பட பலர் பிரம்மோற்சவஏற்பாடுகளை நேற்று திருச்சானூரில் பார்வையிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x