Published : 06 Nov 2025 06:31 AM
Last Updated : 06 Nov 2025 06:31 AM

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் / தஞ்சாவூர்: கங்​கை​கொண்​டசோழபுரம், தஞ்​சாவூர் பெரிய கோயி​லில் ஐப்​பசி மாத பவுர்​ணமியை முன்​னிட்டு மூல​வருக்கு நேற்று அன்​னாபிஷேகம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்​டனர். அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்​ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயி​லில் ஒவ்​வோர் ஆண்​டும் ஐப்​பசி மாத பவுர்​ணமி தினத்​தில் 60 அடி சுற்​றள​வும், 13.5 அடி உயர​மும் கொண்ட மூல​வர் பெரு​வுடை​யாருக்கு 100 மூட்டை அரிசி​யால் சாதம் சமைத்​து, அன்​னாபி ஷேகம் நடை​பெறு​வது வழக்​கம்.

அதன்​படி, நேற்று காலை முதல் சாதம் சமைக்​கப்​பட்டு லிங்​கத்​தின் மீது சாற்​றப்​பட்டு, பலகாரங்​கள், பழங்​கள், பூக்​கள் கொண்டு அலங்​கரிக்​கப்​பட்​டது. லிங்​கத்​தின் மீது சாற்​றப்​படும் ஒவ்​வொரு சாத​மும் லிங்​கத்​தின் தன்​மை​யைப் பெறும் என்​பதும், இதனால் ஒரே நேரத்​தில் கோடிக்​கணக்​கான சிவலிங்​கங்களை தரிசிக்​கும் புண்​ணி​யம் கிடைக்​கும் என்​பதும் நம்​பிக்​கை. தொடர்ந்​து, மூல​வருக்கு தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டு, மூல​வர் மீது சாற்​றப்​பட்ட சாதம் பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டது.

மீத மிருந்த சாதம் அரு​கில் உள்ள குளத்​தில் மீன்​களுக்கு உணவாக அளிக்​கப்​பட்​டது. நிகழ்ச்​சிக்​கான ஏற்​பாடு​களை இந்து சமய அறநிலைய துறை​யினர் மற்​றும் காஞ்சி சங்கர மட அன்​னாபிஷேக கமிட்​டி​யினர் செய்​தனர். தஞ்​சாவூர் பெரிய கோயி​லில் 6 அடி உயரமும், 54 அடி சுற்​றள​வும் கொண்ட ஆவுடை​யார், அதன்​மேல் 13அடி உயரம், 23 அடி சுற்​றளவும் உள்ள லிங்​கம் உள்​ளது.

இக்​கோயி​லில் ஐப்​பசி பவுர்​ணமியையொட்டி பெரு​வுடை​யாருக்கு ஆயிரம் கிலோ அன்​னம் மற்​றும் பூசணிக்​காய், வாழைக்​காய், தக்​காளி, முட்​டைகோஸ், காலிபிளவர், பாகற்​காய், பீட்​ரூட், கேரட், உருளைக் கிழங்​கு, வெண்​டை, சுரைக்​காய், ஆப்​பிள், சாத்​துக்​குடி, ஆரஞ்சு உள்ளிட்ட காய்​க​னிகள், இனிப்பு வகைகள் மற்​றும் மலர்​களால் அலங்​காரம் செய்​யப்​பட்டு அன்​னாபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர், அலங்​காரம் கலைக்​கப்​பட்​டு, பொது​மக்​களுக்கு அன்​னம் பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x