Published : 28 Oct 2025 06:44 AM
Last Updated : 28 Oct 2025 06:44 AM

வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்: திருத்தணியில் சுப்பிரமணியருக்கு புஷ்பாஞ்சலி

சென்னை / திருத்தணி: கந்த சஷ்டி விழாவை முன்​னிட்டு வடபழனி முரு​கன் கோயி​லில் சூரசம்​ஹாரம் நேற்று நடந்​தது. அரோகரா கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். திருத்​தணி சுப்​பிரமணி​யர் கோயி​லில் புஷ்​பாஞ்​சலி நடை​பெற்​றது. சென்னை வடபழனி முரு​கன் கோயி​லில் மகா கந்த சஷ்டி விழா கடந்த 21-ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்​பாட்​டுடன் தொடங்​கியது.

அக். 22-ம் தேதி முதல் லட்​சார்ச்​சனை தொடங்​கியது. தொடர்ந்​து, தினசரி காலை, மாலை​யில் இரு​வேளை​யும் பூஜைகள், சுவாமி வீதி உலா​வும் நடந்​தது. விழா​வின் பிர​தான நாளான நேற்​று, உச்சி காலத்​துடன் லட்​சார்ச்​சனை நிறைவு பெற்​றது. அதனை தொடர்ந்து தீர்த்​த​வாரி உற்​சவம் நடந்​தது. மாலை 5.30 மணிக்கு அம்​பாளிடம் வேல் பெற்​று, சூரபத்​மனை வதம் செய்ய முரு​கப் பெரு​மான் புறப்​பட்​டார்.

நேற்று இரவு சூரசம்​ஹாரம் தொடங்​கியது. முரு​கப் பெரு​மான் படை சூழ, யானை, சிங்​கம், ஆடு உள்​ளிட்ட ரூபங்​களில் வந்த சூரபத்​மனை வேலால் வதம் செய்​யும் காட்சி அரங்​கேறியது. இன்று வள்ளி தேவசேனா சமேத சுப்​பிரமணி​யர் திருக்​கல்​யாண வைபவம் நடக்​கிறது. திருமண நிகழ்வு முடிந்​ததும் முரு​கப் பெரு​மானுக்கு மொய் எழுத பக்​தர்​கள் அழைக்​கப்​படு​வர். மொய் எழுதும் தொகைக்​கான ரசீது, பிர​சாதங்​கள் வழங்​கப்​பட​வுள்​ளன. இரவு 8 மணிக்கு திருமண விருந்து அளிக்​கப்​படு​கிறது.

மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில், பெசன்ட்​நகர் அறு​படைவீடு முரு​கன் கோயில், கந்​தக்​கோட்​டம், மாடம்​பாக்​கம், தேனுபுரீஸ்​வரர், குமரக்​கோட்​டம், குன்​றத்​துார், சிறு​வாபுரி, திருப்​போரூர், வல்​லக்​கோட்டை உட்பட சென்னை மற்​றும் புறநகரில் முரு​கன் கோயில்​களில் கந்த சஷ்டி விழா நடை​பெற்​றது.

முரு​க​னின் அறு​படை வீடு​களில் ஒன்​றாக விளங்​கும் திருத்​தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் நடை​பெற்று வரும் கந்த சஷ்டி விழா​வின் முக்​கிய விழா​வான புஷ்​பாஞ்​சலி நேற்று நடை​பெற்​றது. இதில், நேற்று அதி​காலை மூல​வர் சுப்​பிரமணிய சுவாமி சிறப்பு அலங்​காரத்​தில் பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

தொடர்ந்​து, நேற்று மாலை 4 மணி​யள​வில், சுப்​பிரமணிய சுவாமி கோயி​லின் உப கோயி​லான சுந்தர விநாயகர் கோயில் இருந்​து, பல்​வேறு மாநிலங்​களில் இருந்து கொண்டு வரப்​பட்ட பல வகை​யான மலர்​களை கோயில் ஊழியர்​கள், பக்​தர்​கள் ஊர்​வல​மாக சரவணப் பொய்கை வழி​யாக சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு சென்​றனர். பிறகு, மாலை 5 மணி​யள​வில் காவடி மண்​டபத்​தில் உற்​சவர் சண்​முகருக்கு பல வகை​யான மலர்​களால் புஷ்​பாஞ்​சலி​யும், மகா தீபா​ராதனை​யும் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x