Published : 22 Oct 2025 06:51 AM
Last Updated : 22 Oct 2025 06:51 AM
சென்னை: சென்னை வடபழனியை அடுத்த சாலிகிராமத்தில் உள்ள பரணி காலனி, சூர்யா தெருவில் ஸ்ரீ பால விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய அரசமர பிள்ளையாருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால சமயத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது.
இதுகுறித்து இக்கோயில் அரங்காவலரும், ஸ்ரீ பால விநாயகர் சேவா டிரஸ்ட் தலைவருமான குருஜி ஸ்ரீ சுப்பிரமணியம் கூறியதாவது: 1983-ம் ஆண்டு, நானும் எனது நண்பரும் சேர்ந்து ரூ.20,000 பணத்தை வைத்து, ஒரு குடிசை அளவிலேயே விநாயகருக்கு கோயில் எழுப்பினோம். 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்சார்ச்சனை தொடங்கப்பட்டது.
2000-ம் ஆண்டு ராஜ கோபுரம் கட்டி மூலவர், முருகர், ஆஞ்சநேயர் சந்நிதிகளை அமைத்தோம். ஏகதின லட்சார்ச்சனையின் 14-ம் ஆண்டு சமயத்தில் அரசமரத்தில் சுயம்புவாக விநாயகர் தோன்றினார்.
அன்று முதல் அரசமர விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் திரிசதி அர்ச்சனை செய்து வருகிறோம்ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இக்கோயிலை ‘திவ்ய ஷேத்ரம்’ என்று கூறுவர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT