Published : 22 Oct 2025 06:20 AM
Last Updated : 22 Oct 2025 06:20 AM

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்

சென்னை: சென்னை வடபழனி முரு​கன் கோயில் மகா கந்த சஷ்டி லட்​சார்ச்​சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்​கு​கிறது. இத்​திரு​விழா​வின் முத்​தாய்ப்​பாக சூரசம்​ஹாரம் அக்​.27 அன்​றும், திருக்​கல்​யாண வைபவம் அக்​.28-ம் தேதி​யன்​றும் விமரிசை​யாக நடை​பெறவுள்​ளது.

சென்னை வடபழனி முரு​கன் கோயி​லில் மகா கந்த சஷ்டி திரு​விழா, வரசித்தி விநாயகர் மூஷிக வாகன புறப்​பாட்​டுடன் அக். 21-ம் தேதி (நேற்​று) மாலை கோலாகல​மாக தொடங்​கியது. விழா​வின் முதல் நாள் நிகழ்​வாக மகா கந்த சஷ்டி லட்​சார்ச்​சனை அக். 22-ம் தேதி (இன்​று) காலை 9 மணிக்கு வேத மந்​திரங்​கள் முழங்க தொடங்​கு​கிறது.

இரவு 8 மணிக்கு மங்​களகிரி விமானத்​தில் பாலசுப்​பிரமணிய சுவாமி புறப்​பாடு நடை​பெறுகிறது. தொடர்ந்து அக்​.23-ம் தேதி பாலசுப்​பிரமணிய சுவாமி சந்​திரபிரபை புறப்​பாடும், அக்​.24-ம் தேதி ஆட்​டுக்​கிடா வாகன புறப்​பாடும், அக்​.25-ம் தேதி நாக வாகன புறப்​பாடும், அக்​.26-ம் தேதி மங்​களகிரி விமான புறப்​பாடும் நடை​பெறவுள்​ளன.

விழா​வின் முக்​கிய நிகழ்​வாக அக்​.27-ம் தேதி இரவு 8 மணிக்கு சூரசம்​ஹார உற்​சவ​மும், அதைத் தொடர்ந்து சண்​முகப் பெரு​மான் மயில் வாகன புறப்​பாடும் நடை​பெறும். மறு​நாள் அக்​.28 இரவு 7 மணிக்கு வள்ளி - தேவசேனா சமேத  சுப்​ரமணி​யருக்கு திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து பல்​வேறு வைபவங்​களு​டன் விழா நடை​பெற்​று, நவ.1-ம் தேதி அருணகிரி​நாதர் புறப்​பாடுடன் நிறைவடைகிறது. விழாவுக்​கான யாக​சாலை பூஜைகள் அக்​.22-ம் தேதி மாலை 7 மணிக்கு தொடங்கி 27-ம் தேதி உச்​சி​கால பூர்​ணாஹூதி பூஜை​யுடன் நிறைவு பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x