Published : 08 Oct 2025 05:47 AM
Last Updated : 08 Oct 2025 05:47 AM

பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்

பழநி: பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி காப்​புக் கட்​டு​தலுடன் தொடங்​கு​கிறது. திண்டுக்​கல் மாவட்​டம் பழநி மலைக்​கோயி​லில் கந்​தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்​பகல் 12 மணிக்கு உச்​சி​காலத்​தில் தொடங்குகிறது. விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடை​பெற உள்​ளது.

அன்று அதி​காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​படும். மாலை 5.30 மணிக்கு நடக்​கவேண்​டிய சாயரட்சை பூஜை பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறும். பிற்​பகல் 3 மணிக்கு சின்​னக்​கு​மாரசு​வாமி அசுரர்​களை வதம்​புரி​யும் பொருட்​டு, மலைக்​கொழுந்து அம்​மனிடம் வேல் வாங்​குதல் நிகழ்ச்​சி​யுடன் சந்​நிதி அடைக்​கப்​படும்.

தொடர்ந்​து, திருஆ​வினன்​குடி கோயி​லில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்​யப்​பட்​டு, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீ​தி​யில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீ​தி​யில் பானுகோபன்​சூரன் வதமும், தெற்கு கிரிவீ​தி​யில் சிங்​க​மு​காசூரன் வதமும், மேற்கு ரதவீதி​யில் சூரபத்​மன் வதமும் நடை​பெற உள்​ளது.

வரும் 28-ம் தேதி மலைக்​கோயி​லில் வள்ளி தேவசேனா சமேத சண்​முகருக்​கும், பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் வள்ளி தேவசேனாசமேத முத்​துக்​கு​மாரசு​வாமிக்​கும் திருக்​கல்​யாணம் நடை​பெற உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x