Published : 01 Oct 2025 06:48 AM
Last Updated : 01 Oct 2025 06:48 AM

திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை, சூரியபிரபை வாகனத்தில் மலையப்பர் சூரிய நாராயணராக எழுந்தருளினார்.

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை​யிலும், இரவு சந்​திர பிரபை​யிலும் உற்​சவ​ரான மலை​யப்​பர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்பாலித்​தார்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி மாலை கொடியேற்​றத்​துடன் பிரம்​மாண்​ட​மாக தொடங்​கியது. அதே நாள் மாலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு சுவாமிக்கு அரசு தரப்​பில் பட்டு வஸ்​திரங்​களை காணிக்​கை​யாக வழங்​கினர். அன்​றிரவு பெரிய சேஷ வாக​னத்​தில் மலை​யப்​பர் வீதி உலா​வுடன் பிரம்​மோற்சவ விழா​வின் வாகன சேவை​கள் தொடங்​கப்​பட்​டன.

இதனை தொடர்ந்​து, சின்ன சேஷ வாக​னம், அன்ன வாக​னம், சிம்ம வாக​னம், முத்து பல்​லக்கு வாக​னம், கற்பக விருட்ச வாக​னம், சர்வ பூபால வாக​னம், மோகினி அலங்​காரம், கருட சேவை, அனு​மன் வாக​னம், தங்க ரத ஊர்​வலம் மற்​றும் கஜ வாக​னம் என வரிசை​யாக கடந்த 6 நாட்​களில் ஒவ்​வொரு வாக​னத்​தி​லும் உற்​சவ​ரான மலை​யப்​பர் எழுந்​தருளி 4 மாட வீதி​களில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள்பாலித்​தார்.

இந்​நிலை​யில், 7-ம் நாளான நேற்று காலை சூரிய நாராயணர் அலங்​காரத்​தில் சூரிய பிரபை வாக​னத்​தில் மலை​யப்​பர் பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, தமிழகம், புது​வை, கேரளா, கர்​நாடகா உள்​ளிட்ட மாநிலங்​களில் இருந்து 452 நடன கலைஞர்​கள் மாட வீதி​களில் நடன​மாடி அனை​வரை​யும் கவர்ந்​தனர்.

சூரிய பிரபை வாக​னத்தை தொடர்ந்து இரவு சந்​திர பிரபை வாக​னத்​தில் மலை​யப்​பர் எழுந்​தருளி​னார். இதில் திரளான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அலங்​காரத்​தில் எழுந்​தருளிய மலை​யப்​பர், 4 மாட வீதி​களில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள்பாலித்​தார். மாட வீதி​களில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்​தான அதி​காரி​கள், அர்ச்​சகர்​கள், நடன குழு​வினர் மற்​றும் திரளான பக்​தர்​கள் பங்​கேற்று சிறப்​பித்​தனர்.

பிரம்​மோற்​சவத்​தின் 8-ம் நாளான இன்று காலை 7 மணிக்கு ஏழு​மலை​யான் கோயில் முன்​னிருந்து தேரோட்​டம் தொடங்க உள்​ளது. இதில் நேர்த்தி கடன் செலுத்த திரளான பக்​தர்​கள் வர உள்​ளனர். இதனை தொடர்ந்து இரவு குதிரை வாக​னத்​தில் மலை​யப்​பர் பக்​தர்​களுக்கு அருள்பாலிப்​பார். நாளை 2-ம் தேதி காலை கோயில் அருகே உள்ள தெப்​பக்​குளத்​தில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது. இதனை தொடர்ந்து மாலை கொடி இறக்க நிகழ்ச்​சிகளு​டன் பிரம்​மோற்​சவம் நிறைவடைய உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x