Published : 25 Sep 2025 06:22 AM
Last Updated : 25 Sep 2025 06:22 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா

ரங்கநாயகி தாயார்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் நவராத்​திரி விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது. பிற்​பகலில் திரு​மஞ்​சனம் கண்​டருளிய ரங்​க​நாயகி தாயார், மூலஸ்​தானத்​தில் இருந்து புறப்​பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்​டபம் வந்​தடைந்​தார். அங்கு பக்​தர்​களுக்கு அருள்​பாலித்த தாயார், இரவு 9.45 மணிக்கு மூலஸ்​தானம் சென்​றடைந்​தார்.

28-ம் தேதி வரை தின​மும் கொலு மண்​டபத்​தில் தாயார் வீற்​றிருப்​பார். முக்​கிய நிகழ்​வாக தாயார் திரு​வடி சேவை வரும் 29-ம் தேதி நடை​பெறுகிறது. இந்த சேவை ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டுமே நடை​பெறும் என்​ப​தால் திரளான பக்​தர்​கள் பங்​கேற்​பார்​கள். அக். 1-ம் தேதி மாலை திரு​மஞ்​சனம், அன்று இரவு படிப்பு கண்​டருளுதல் நடை​பெறும். விழா ஏற்பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார் மற்​றும் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x