Published : 21 Sep 2025 12:41 AM
Last Updated : 21 Sep 2025 12:41 AM

ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்

ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று சென்னைக்கு வருகை புரிந்துள்ள காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்​திரி விழாவை முன்​னிட்​டு, காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், நேற்று சென்​னைக்கு வருகை புரிந்​துள்​ளனர்.

ஸ்ரீ சாரதா நவராத்​திரி மஹோற்​சவம், செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை, சென்​னை, தாம்​பரம் கிழக்கு ராஜகீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்​வாமி வித்யா மந்​திர் பள்ளிவளாகத்​தில் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை முன்​னிட்டு காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், செப். 20-ம் தேதி (நேற்​று) இங்கு வருகை புரிந்​துள்​ளனர். இதையடுத்து செப். 21-ம் தேதி (இன்​று) மாலை 4.25 மணி அளவில் திவ்ய தேச கண்​காட்​சியை தொடங்கி வைக்க உள்​ளனர்.

ஸ்ரீ சாரதா நவராத்​திர் மஹோற்​சவத்தை முன்​னிட்டு செப். 22-ம் தேதி முதல் பிக்ஷாவந்​தனம், சஹஸ்ர சண்டி மகா யாகத்​துக்கு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. செப். 22-ம் தேதி காலை 7.30 மணிக்கு அனுக்​ஞை, குரு வந்​தனம், கணபதி பூஜை, பிர​தான – விசேஷ சங்​கல்​பம், பூர்​வாங்​கம், புண்​ணி​யாக​வாசனம், கலச பிர​திஷ்டை நடை​பெறும். செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை காலை 8.30 மணிக்கு தினசரி பூஜை, சங்​கல்​பம், சப்​தசதி பாராயணம் (2 முறை), ஹோமம் (1 முறை), மகா தீபா​ராதனை நடை​பெறும். அன்​றைய தினம் மாலை 5 மணி அளவில் விஷ்ணு சஹஸ்​ர​நாம பாராய ணம், மூல மந்​திர ஜெபம், லலிதா சஹஸ்​ர​நாம பாராயணம், லட்​சார்ச்​சனை, மகா தீபா​ராதனை, மந்​திர புஷ்பம் உள்​ளிட்​டவை நடை​பெறும். மேலும் திரு​விளக்கு பூஜை, அஸ்வ பூஜை, ஸ்ரீவித்யா கணபதி ஹோமம், துர்கா சுக்தஹோமம், சூலினி துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம்,கன்யா பூஜை உள்​ளிட்​ட​வற்​றுக்​கும் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

கூடு​தல் விவரங்​களை 8122853541, 9840021526, 9940369680, 7358877666, 9841446897, 9444911893 ஆகிய எண்​களை தொடர்பு கொண்டு அறிய​லாம். உன்னத எண்​ணங்​களை​யும் நல்ல லட்​சி​யங்​களை​யும் கொண்​ட​வர்​களாக இளைய தலை​முறை​யினரை மாற்​றும் நோக்​கத்​துடன், ஆன்​மிக, கலாச்​சார கல்​வி​யுடன் நவீன கல்​வியை வழங்​வதற்​காக, தாம்​பரம் (கிழக்​கு), ராஜகீழ்ப்​பாக்​கத்​தில்  காஞ்சி மகாஸ்​வாமி வித்யா மந்​திர்​ பள்​ளி2010-ம்​ ஆண்​டு தொடங்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x