Published : 20 Sep 2025 09:42 AM
Last Updated : 20 Sep 2025 09:42 AM

பிரம்மோற்சவ விழாவில் 60 டன் மலர்களால் அலங்காரம்: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தகவல்

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்பட உள்​ளது. 9 நாட்​கள் நடை​பெற உள்ள இந்த விழாவுக்​காக ரூ.3.5 கோடி செல​வில் 60 டன் மலர்​களால் அலங்​காரம் செய்​யப்பட உள்​ளது. திருப்​பதி ஏழு​மலை​யானின் பிரம்​மோற்சவ விழா வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, அக்​டோபர் 2-ம் தேதி வரை கோலாகல​மாக நடை​பெற உள்​ளது. இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிஅனில்​கு​மார் சிங்​கால் தலை​மை​யில் திரு​மலை​யில் நேற்று நடந்​தது.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிரம்​மோற்சவ விழாவுக்​கான அனைத்து ஏற்​பாடு​களும் நிறைவு பெற்​றுள்​ளன. ஆகம சாஸ்​திர விதி​களின்​படி கடந்த செவ்​வாய்க்​கிழமை கோயில் முழு​வதும் சுத்​தம் செய்​யப்​பட்​டது. வாக​னங்​களின் மராமத்து பணி​கள் நிறைவடைந்து உள்​ளன. முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு வரும் 24-ம் தேதி பட்டு வஸ்​திரங்​களை காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். அன்று மாலை கொடியேற்​றத்​துடன் ஏழு​மலை​யானின் பிரம்​மோற்​சவம் தொடங்​கு​கிறது.

மறு​நாள் 25-ம் தேதி பக்​தர்​கள் தங்​கும் பிஏசி-5 தொகுப்பு விடு​தி​களை முதல்​வர் திறந்து வைக்​கிறார். சிவில் பொறி​யியல் பணி​களுக்​காக ரூ.9.5 கோடி​யும், எலக்ட்​ரிக் பணி​களுக்​காக ரூ.5.5 கோடி​யும் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. மலர் அலங்​காரத்​துக்​காக ரூ. 3.5 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் 60 டன் மலர்​களால் அலங்​காரம் செய்​யப்பட உள்​ளது.

நேரடி​யாக திரு​மலைக்கு வரும் பக்​தர்​களுக்​காக 3,500 தங்​கும் அறை​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன. திரு​மலை​யில் 36 எல்​.இ.டி தொலைக்​காட்​சிகள் மூலம் வாகன சேவையை காண ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. கருட சேவையன்று தவிர, நாள் ஒன்​றுக்கு 1.16 லட்​சம் சிறப்பு தரிசன டிக்​கெட்​டு​கள், மற்​றும் 25 ஆயிரம் சர்வ தரிசன டிக்​கெட்​டு​கள் விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளன.

சாமானிய பக்​தர்​களுக்கு முன்​னுரிமை வழங்க முடிவு செய்​யப்​பட்​டு, விஐபி பிரேக் தரிசன முறை ரத்து செய்​யப்​பட்​டிருக்​கிறது. மூத்த குடிமக்​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சிறப்பு தரிசனங்​களும், ஆர்​ஜித சேவை டிக்​கெட்​டு​களும் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. தின​மும் 8 லட்​சம் லட்டு பிர​சாதங்​கள் வழங்​கப்பட உள்​ளன. 20 உதவி மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

கருட சேவையன்று மாட வீதி​களில் வாகன சேவையை காண திரண்​டிருக்​கும் பக்​தர்​களுக்கு 14 வகை​யான உணவு​களை விநி​யோகம் செய்ய ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தின​மும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை பக்​தர்​களுக்கு மாத்ரு ஸ்ரீ வெங்​க​மாம்​பாள் அன்​ன​தான சத்​திரத்​தில் இலவச அன்​ன​தானம் வழங்​கப்​படும். திரு​மலை மற்​றும் திருப்​ப​தி​யில் வாக​னங்​கள் நிறுத்​து​மிட வசதி செய்​யப்​பட்​டுள்​ளது. தின​மும் 1,900 தடவை திரு​மலை-​திருப்​பதி இடையே ஆந்​திர அரசு பேருந்​துகள் இயக்​கப்​படும். கருட சேவை​யான 28-ம் தேதி 3,200 தடவை​கள் பேருந்​துகள் இயக்​கப்​படும்.

2,000 திருப்​பதி தேவஸ்​தான பாது​காவலர்​கள், 4,700 போலீ​ஸார் 24 மணி நேர​மும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படு​வர். மேலும் 3,500 ஸ்ரீவாரி சேவகர்​கள், 450 சீனியர் அதி​காரி​களும் பாது​காப்​பு, சேவை உள்​ளிட்ட பணி​யில் இருப்​பர். 3,000 கண்​காணிப்பு கேம​ராக்​கள் அமைக்​கப்​பட்​டு, கமாண்ட் கன்ட்​ரோல் அறை மூலம் 24 மணி நேர​மும் கண்​காணிக்​கப்​படும்
2,300 துப்​புரவு தொழிலா​ளர்​களு​டன் கூடு​தலாக 960 பேர் துப்​புரவு பணி செய்ய நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அனில்​கு​மார்​ சிங்​கால்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x