Published : 19 Sep 2025 07:33 AM
Last Updated : 19 Sep 2025 07:33 AM

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்: திருப்​பதி மாடவீதிகளில் 2 லட்சம் பக்தர்களுக்கு அனுமதி

திருமலை:​ திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தில் சுமார் 2 லட்​சம் பக்​தர்​கள் மாட வீதி​களில் அமர்ந்து வாகன சேவை​களை காணும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு தெரி​வித்​தார்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, அக்​டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்​கள் நடை​பெற உள்​ளது. புரட்​டாசி மாதம் என்​ப​தால் இவ்​விழாவுக்கு அதிக பக்​தர்​கள் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால் 9 நாட்​களும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்​தானம் ரத்து செய்​துள்​ளது.

பிரம்​மோற்​சவத்​திற்கு திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு அரசு கூடு​தல் பேருந்​துகளை இயக்க உள்​ளது. அலிபிரி சோதனைச் சாவடி​யில் வாகன தணிக்கை தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கண்​காணிப்பு கேம​ராக்​கள் கூடு​தலாக பொருத்​தப்​பட்​டு, பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. ஆக்​டோபஸ் கமாண்​டோக்​கள், ஆயுதப்​படை​யினர் என சுமார் 10 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​களில் ஈடுபட உள்​ளனர்.

பிரம்​மோற்சவ ஏற்​பாடு​கள் திரு​மலை மற்​றும் திருப்​ப​தி​யில் போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று வரு​கிறது. ஏழு​மலை​யான் கோயில் உட்பட திரு​மலை​யில் முக்​கிய இடங்​கள் அனைத்​தும் மின்​விளக்கு அலங்​காரத்​தில் ஜொலிக்​கிறது.

வெளி​நாடு​களில் இருந்து மலர்​கள் வரவழைக்​கப்​பட்​டு, கோயிலுக்​குள் அலங்​காரம் செய்​யப்​பட்டு வரு​கிறது. வரும் 23-ம் தேதி அங்​கு​ரார்ப்பண நிகழ்ச்சி ஆகம விதி​களின்​படி நடை​பெறுகிறது. அன்​று, ஏழு​மலை​யானின் மெய்​காப்​பாள​ராக கருதப்​படும் விஸ்​வக்​சேனர் ஆயுதம் ஏந்தி மாட வீதி​களில் உலா வந்து பாது​காப்பை பார்​வை​யிட உள்​ளார்.

24-ம் தேதி மாலை கோயி​லில் உள்ள தங்க கொடி மரத்​தில் கருடன் சின்​னம் பொறித்த பிரம்​மோற்சவ கொடி ஏற்​றப்​படு​கிறது. இதையடுத்து ஆந்​திர அரசு சார்​பில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தம்​பதி சமேத​ராக தலை​யில் பட்டு வஸ்​திரத்தை சுமந்து வந்து சுவாமிக்கு சமர்ப்​பணம் செய்ய உள்​ளார்.

அன்று இரவு, ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​மாய் உற்​சவர் மலை​யப்​பர் 4 மாட வீதி​களில் உலா வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலிக்க உள்ளார். தின​மும் காலை 8 மணி முதல் 10 மணி வரை​யிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை​யிலும் வாகன சேவை​கள் நடை​பெற உள்​ளன.

இந்​நிலை​யில் பிரம்​மோற்சவ ஏற்​பாடு​கள் குறித்து அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு நேற்று திரு​மலை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஏழு​மலை​யானின் பிரம்​மோற்சவ வைபோகத்தை காண வரும் பக்​தர்​களுக்கு மாட வீதி​களில் பல்​வேறு வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

ஒரே நேரத்​தில் சுமார் 2 லட்​சம் பக்​தர்​கள் வாகன சேவையை காணும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்யப்​பட்​டுள்​ளன. ஆங்​காங்கே மெகா தொலைக்​காட்​சிகளும் அமைக்​கப்​பட்​டுள்​ளன. வாகன சேவையை காணவரும் பக்​தர்​களுக்கு தண்​ணீர், மோர், பால், டீ, சிற்​றுண்டி மற்​றும் உணவுப் பொட்​டலங்​கள் உடனுக்​குடன் வழங்​கப்​படும். துப்​புர​வுப் பணி​கள், பாது​காப்பு ஏற்​பாடு​கள், போக்​கு​வரத்​து, அன்​ன​தானம் உள்​ளிட்​டவை மீது தனி கவனம் செலுத்​தப்​பட்​டுள்​ளது.

வாகன சேவையை மட்​டுமின்​றி, மூல​வரை​யும் தரிசிக்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. 24-ம் தேதி ஆந்​திர முதல்வர் சந்​திர​பாபு நாயுடு தம்​பதி சமேத​மாய் சுவாமிக்கு பட்டு வஸ்​திரங்​களை வழங்க உள்​ளார். இந்​நிகழ்ச்​சி​யில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனும்​ கலந்​து கொள்​ள உள்​ளார்​. இவ்​வாறு பி.ஆர்​. நாயுடு தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x