Published : 02 Sep 2025 09:22 AM
Last Updated : 02 Sep 2025 09:22 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்.24-ல் தொடக்கம்

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் இந்த ஆண்டு வரு​டாந்​திர பிரம்​மோற்​சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. அன்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பட்டு வஸ்​திரங்​களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க உள்​ளார். அன்​றிரவு பெரிய சேஷ வாக​னத்​தில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​மாக மலை​யப்​பர் வீதி​யுலா வருகிறார்.

செப்​டம்​பர் 25-ம் தேதி காலை சின்ன சேஷ வாகன சேவை​யும், இரவு அன்ன வாகன சேவை​யும் நடை​பெற உள்​ளன. 26-ம் தேதி காலை சிம்ம வாக​னம், இரவு முத்​துப்​பல்​லக்கு வாக​னம், 27-ம் தேதி காலை கற்பக விருட்சக வாக​னம், இரவு சர்வ பூபால வாக​னம், 28-ம் தேதி காலை மோகினி அலங்​கார சேவை, இரவு கருடசேவை நிகழ்ச்​சிகள் நடை​பெற உள்​ளன.

6-ம் நாளான 29-ம் தேதி காலை அனு​மன் வாகன சேவை, மாலை 4 மணிக்கு தங்க ரத ஊர்​வலம், இரவு கஜ வாகன சேவை, 30-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்​திர பிரபை, அக்​டோபர் 1-ம் தேதி காலை தேர்த்​திரு​விழா, இரவு குதிரை வாகன சேவை நடை​பெற உள்​ளது.

நிறைவு நாளான அக்​டோபர் 2-ம்​தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது. அன்​றிரவு 8.30 மணிக்கு கொடி​யிறக்க நிகழ்ச்​சி​யுடன் பிரம்​மோற்​சவம் நிறைவடைய உள்​ளது. பிரம்​மோற்சவ விழா​வில் தின​மும் காலை 8 மணி முதல் 10 மணி வரை​யிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை​யிலும் வாகன சேவை​கள் நடை​பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x