Published : 30 Aug 2025 06:37 AM
Last Updated : 30 Aug 2025 06:37 AM

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்.

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப்பெரு​விழா நேற்று மாலை கொடி யேற்​றத்​துடன் தொடங்​கியது. நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா ஒவ்​வோர் ஆண்​டும் ஆக. 29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி செப்​.8-ம் தேதி வரை நடை​பெறும்.

அதன்​படி, நடப்​பாண்டு விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முன்​ன​தாக, பேராலய முகப்​பில் கொடி ஊர்​வலம் தொடங்​கி, பேரால​யத்​தைச் சுற்​றி​லும் குவிந்​திருந்த பக்​தர்​களுக்கு மத்​தி​யில் நடை​பெற்​றது. தொடர்ந்​து, கடற்​கரை சாலை, ஆரிய நாட்​டுத் தெரு வழி​யாகச் சென்ற கொடி ஊர்​வலம் மீண்​டும் பேரால​யத்தை அடைந்​தது.

தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடியை புனிதம் செய்து வைத்​தார். தொடர்ந்​து, திருத்​தலக் கலை​யரங்​கில் மாதா மன்​றாட்​டு, நற்​கருணை ஆசி, தமிழில் திருப்​பலி நிறைவேற்​றப்​பட்​டு, லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் முன்​னிலை​யில் கொடியேற்​றம் நடை​பெற்​றது.

இதில், தமிழகம் மற்​றும் பல்​வேறு மாநிலங்​களில் இருந்து வந்​திருந்த லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் ‘ஆவே மரி​யா’ என்​றும், ‘மா​தாவே’ என்​றும் முழக்​கமிட்​டபடி, தொடர்ந்​து, வாணவேடிக்கை நடை​பெற்​றது. இந்​நிகழ்​வில், பேராலய அதிபர் இருதய​ராஜ், துணை அதிபர் அற்​புத​ராஜ், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

தொடர்ந்து செப்​.7-ம் தேதி வரை ஒவ்​வொரு நாளும் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், இந்​தி, ஆங்​கிலம், கொங்​கணி ஆகிய மொழிகளில் விண்​மீன் ஆலயம், பேராலய மேல் கோயில், பேராலய கீழ் கோயில் ஆகிய இடங்​களில் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெறவுள்​ளன. முக்​கிய நிகழ்​வான பெரிய தேர் பவனி செப். 7-ம் தேதி மாலை நடை​பெறும். செப். 8-ம் தேதி மாலை கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவடை​யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x