Published : 27 Aug 2025 08:28 AM
Last Updated : 27 Aug 2025 08:28 AM

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சண்டிகேசுவரர் தேரை இழுத்த பெண்கள்.

திருப்பத்தூர்: பிள்​ளை​யார்​பட்​டி​யில் நேற்று நடை​பெற்ற கற்பக விநாயகர் கோயில் தேரோட்​டத்​தில் ஏராள​மான பக்​தர்​கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது.

இந்​தக் கோயி​லில் விநாயக சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. கடந்த 23-ம் தேதி கஜமுக சூரசம்​ஹாரம் நடை​பெற்​றது. முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது.

சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்.

இதையொட்​டி, நேற்று பெரிய தேரில் விநாயகர், சிறிய தேரில் சண்​டிகேசுவரர் எழுந்​தருளினர். மாலை 5.40 மணிக்கு தேரோட்​டம் தொடங்​கியது. ஏராள​மான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர். சண்​டி கேசுவரர் தேரை பெண்​கள் மட்​டுமே இழுத்​தனர். மேலும், ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டுமே நடை​பெறும் சந்​தனக்​காப்பு அலங்​காரத்​தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூல​வர் கற்பக விநாயகர் பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தார்.

சதுர்த்​தியை முன்​னிட்டு இன்று அதி​காலையில் நடை திறக்​கப்​பட்​டு, சிறப்பு பூஜைகள் நடை​பெறுகின்​றன. தொடர்ந்​து, கோயில் திருக்​குளத்​தில் அங்​குசத்​தேவருக்கு தீர்த்​த​வாரி நடை​பெறுகிறது. பிற்​பகல் 2 மணிக்கு மூல​வருக்கு முக்​குறுணி மோதகம் படையலிடப்​படும். இரவு பஞ்​சமூர்த்தி சுவாமி புறப்​பாடு நிகழ்ச்​சி​யுடன் விழா நிறைவுபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x