Published : 23 Aug 2025 07:49 AM
Last Updated : 23 Aug 2025 07:49 AM

திருப்பதியில் ஜூலை மாதத்தில் 1.24 கோடி லட்டு பிரசாதம் விற்பனை

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் கடந்த ஜூலை மாதம் லட்டு விற்​பனை​யில் சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது. அதாவது கடந்த ஜூலை மாதத்​தில் மட்​டும் ஏழு​மலை​யானின் லட்டு பிர​சாதம் 1,25,10,300 தயாரிக்​கப்​பட்​ட​தில், 1,24,40,082 விற்பனையாகி உள்​ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்​தில் 1,04,57,550 லட்டு பிர​சாதங்​கள் விற்​பனை​யானது. இதில் விசேஷம் என்​னவெனில் கடந்த ஜூலை 12-ம் தேதி​யன்று மட்​டும் 4,86,134 லட்டு பிர​சாதங்​கள் விற்​கப்​பட்​டுள்​ளன.

கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி 3.24 லட்​சம் லட்​டு​கள் மட்​டுமே விற்​பனை​யானது. இந்த ஒரு நாளில் மட்​டுமே திருப்​பதி தேவஸ்​தானத்​திற்கு லட்டு விற்​பனை​யின் மூலம் ரூ.2.43 கோடி கிடைத்துள்ளது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x