Published : 19 Aug 2025 06:10 AM
Last Updated : 19 Aug 2025 06:10 AM

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்.

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம், திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் அமைந்​துள்ள கற்பக விநாயகர் கோயி​லில் சதுர்த்தி விழா கொடியேற்​றுடன் நேற்று தொடங்​கியது. பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயி​லில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்​கள் விமரிசை​யாக நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்​றத்துடன் நேற்று தொடங்​கியது.

இதையொட்​டி, சண்​டிகேசுவரர் சந்​நி​தி​யில் இருந்து கொடி புறப்​பாடாகி, கோயிலை வலம் வந்​தது.தொடர்ந்​து, கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், சண்​டிகேசுவரர், அங்​குசத்​தேவர் எழுந்​தருளினர். பின்​னர், கொடிமரத்​துக்​கும், மூஞ்​சூறு வாக​னம் வரையப்​பட்ட கொடிப்​படத்​துக்​கும் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன.

சிவாச்​சா​ரி​யார்​கள் வேத மந்​திரங்​கள் முழங்க கொடியேற்​றம் நடை​பெற்​றது. விழா நாட்​களில் காலையில் வெள்​ளிக் கேடகத்​தி​லும், மாலை​யில் சிம்​மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்​ளிட்ட வாக​னங்​களி​லும் விநாயகர் எழுந்தருளி திரு​வீதி உலா நடை​பெறும்.

ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை சூரனை விநாயகர் வதம் செய்​யும் கஜமுக சூரசம்​ஹாரம், 26-ம் தேதி தேரோட்​டம் நடை​பெறும். அன்​றைய தினம் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் நடை​பெறும் சந்​தனக்​காப்பு அலங்​காரத்​தில் மூல​வர் கற்பக விநாயகர் பக்​தர்​களுக்கு காட்​சி​யளிப்​பார்.

ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்​தி​யன்​று, அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெறும். தொடர்ந்​து, கோயில் திருக்​குளத்​தில் அங்​குசத்​தேவருக்கு தீர்த்​த​வாரி நடை​பெறும். பிற்​பகல் 2 மணிக்கு மூல​வருக்கு முக்​குறுணி மோதகம் படையலிடப்​படும். இரவு பஞ்​சமூர்த்தி சுவாமி புறப்​பாடு நிகழ்ச்​சி​யுடன் விழா நிறைவு பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x