Published : 17 Aug 2025 12:42 AM
Last Updated : 17 Aug 2025 12:42 AM

திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலம்: காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஆடிக் கிருத்திகையையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் வள்​ளி, தெய்​வானை​யுடன் முருகப்பெருமான்.

திருவள்ளூர்: அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

​திரு​வள்​ளூர் மாவட்​டம் திருத்​தணி​யில் உள்ள சுப்​பிரமணிய சுவாமி கோயில், முரு​க​னின் அறு​படை வீடு​களில் ஒன்​றாக விளங்​கு​கிறது. இக்​கோயி​லில், ஆண்​டு​தோறும் ஆடிக் கிருத்​திகை திரு​விழா சிறப்​பாக நடை​பெறும். இந்த ஆண்டு ஆடிக் கிருத்​திகை திரு​விழா, கடந்த 14-ம் தேதி ஆடி அஸ்​வினி விழாவோடு தொடங்​கியது. முக்​கிய நிகழ்ச்​சி​யான ஆடிக் கிருத்​திகை திரு​விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. அதி​காலை 4 மணி அளவில் மூல​வருக்கு சிறப்பு அபிஷே கம் மற்​றும் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. தங்​கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்க மரகதக்​கல் மற்​றும் வைர ஆபரணங்​கள் அணி​வித்​து, சிறப்பு தீபா​ராதனை நடை​பெற்​றது. அதே​போல், காவடி மண்​டபத்​தில் சிறப்பு அலங்​காரத்​தில் காட்​சி​யளித்த உற்​சவருக்கு தீபா​ராதனை நடை​பெற்​றது.

தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்​தும், ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்​ளிட்ட பிற​மாநிலங்​களில் இருந்​தும் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் திருத்​தணி​யில் குவிந்​தனர். அதி​காலை முதல் நள்​ளிரவு வரை நீண்ட வரிசை​யில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர். ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பால் காவடி, பன்​னீர் காவடி, புஷ்ப காவடி உள்​ளிட்ட பல வகை​யான காவடிகளை சுமந்​தும், சரவணப் பொய்கை குளம் மற்​றும் நல்​லாங்​குளம் ஆகிய பகு​தி​களில் தலை​முடி காணிக்கை அளித்​தும் தங்​களின் நேர்த்​திக்​கடனை செலுத்​தினர்.

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான செயல் அலு​வலர் ஷியாமள ராவ் தலை​மை​யில் ஆடிக் கிருத்​தி​கையை முன்​னிட்​டு, 17-வது முறை​யாக முரு​கப் பெரு​மானுக்கு பட்டு வஸ்​திரம் கொண்டு வந்து வழங்​கினர். அந்த வஸ்​திரம், மூல​வர், உற்​சவருக்கு அணிவிக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடத்​தப்​பட்​டது.

இரவு 7 மணிக்கு சரவணப் பொய்​கை​யில் 3 நாள் தெப்​பத் திரு​விழா கோலாகல​மாக தொடங்​கியது. வண்ண மின் விளக்​கு​கள், மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட தெப்​பத்​தில் உற்​சவர் முரு​கன், வள்​ளி, தெய்​வானை​யுடன் எழுந்​தருளி, 3 முறை குளத்தை சுற்றி வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். திருத்​தணி நகரின் பல்​வேறு பகு​தி​களில் வியா​பாரி​கள், பொது​மக்​கள் சார்​பில் பக்​தர்​களுக்கு நீர் மோர், அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது. விழாவையொட்டி காஞ்​சிபுரம் டிஐஜி தலை​மை​யில் 1,600-க்​கும் மேற்​பட்​ட போலீ​ஸார்​ பாது​காப்​புப்​ பணி​யில்​ ஈடுபட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x