Published : 16 Aug 2025 06:22 AM
Last Updated : 16 Aug 2025 06:22 AM

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

சென்னை: ஆடி கடைசி வெள்​ளியை ஒட்டி அம்​மன் கோயில்​களில் ஏராள​மான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். ஆடி மாதம் அம்​மனுக்கு உகந்த மாதம். இம்​மாதம் முழு​வதும் அனைத்து அம்​மன் கோயில்​களி​லும் சிறப்பு வழி​பாடு நடை​பெறும். குறிப்​பாக, ஆடி வெள்​ளிக்​கிழமை​களில் ஏராள​மான பெண்​கள் பொங்​கலிட்டு அம்​மனை வழிபடு​வர். இந்​நிலை​யில், ஆடி மாத கடைசி வெள்​ளி​யான நேற்று சென்​னை​யில் உள்ள அம்​மன் கோயில்​களில் சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது.

அதி​காலை முதலே அம்​மன் கோயில்​களுக்கு பக்​தர்​கள் வந்த வண்​ணம் இருந்​தனர். பெண்​கள் பொங்​கலிட்​டும், பால் குடம் எடுத்தும், கூழ் வார்த்​தும், சில பகு​தி​களில் அலகு குத்​தி​யும் தங்​களது நேர்த்தி க்கடனை செலுத்தி அம்​மனை வழிபட்​டனர். மேலும், எலுமிச்சை மாலை சாற்​றி​யும், எலுமிச்சை தீபம் ஏற்​றி​யும் பெண்​கள் வேண்​டினர்.

திரு​வொற்​றியூர் வடிவுடை​யம்​மன், மயி​லாப்​பூர் முண்​டகக்​கண்ணி அம்​மன், கோல​விழி​யம்​மன், சூளை அங்​காள பரமேஸ்​வரி, பாரி​முனை காளி​காம்​பாள், கீழ்ப்​பாக்​கம் பாதாள பொன்​னி​யம்​மன், முத்​தமிழ் நகர் பவானி அம்​மன், தி.நகர் முப்​பாத்​தம்​மன், வில்​லி​வாக்​கம் பாலி​யம்​மன் உள்​ளிட்ட சென்னை மற்​றும் புறநகரில் உள்ள அனைத்து அம்​மன் கோயில்​களி​லும் நேற்று அதி​காலை முதல் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடை​பெற்​றன. சில கோயில்​களில் திரு​விளக்கு பூஜை​யும் நடந்​தது. இதே​போல், பெரு​மாள் கோயில்​களில் உள்ள மகாலட்​சுமி சந்​நி​தி​யிலும் சிறப்பு வழி​பாடு நடை​பெற்​றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x