Published : 15 Aug 2025 05:26 AM
Last Updated : 15 Aug 2025 05:26 AM

மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மாதாந்​திர பூஜைக்​காக நாளை (ஆக. 16) நடை திறக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி பூஜைக்​காக கடந்த 29-ம் தேதி நடை​திறக்​கப்​பட்​டது. பின்​னர் 30-ம் தேதி ஒரு​நாள் சிறப்பு வழி​பாட்​டுக்​குப் பிறகு நடை​சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், சிம்ம மாதத்​துக்​காக (ஆவணி) நாளை மாலை 5 மணிக்கு ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்பட உள்​ளது. தொடர்ந்து 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெறும்.

கேரளா​வில் சிம்ம மாதமே மலை​யாளப் புத்​தாண்டு கொண்​டாடப்​படும் மாத​மாக உள்​ளது. சிம்ம மாதம் 20-ம் தேதி (செப்​.5) கேரளா​வின் சிறப்பு வாய்ந்த ஓணம் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. இதற்​காக செப்​.3-ம் தேதி மீண்​டும் நடை திறந்து வழி​பாடு நடை​பெற உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x