Published : 10 Aug 2025 12:42 AM
Last Updated : 10 Aug 2025 12:42 AM

கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள். (உள்படம்) தேரில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை அழகர்​கோ​விலில் உள்ள கள்​ளழகர் கோயில் ஆடித் திரு​விழா​வின் 9-ம் நாளான நேற்று தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. ‘கோ​விந்தா கோவிந்​தா’ கோஷம் முழங்க ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் இதில் பங்​கேற்​றனர்.

கள்​ளழகர் கோயி​லில் ஆடித் திரு​விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தின​மும் காலை​யில் தங்​கச் சப்​பரத்​தி​லும், மாலை​யில் சிம்ம வாக​னம், அனு​மார் வாக​னம், கருட வாக​னம், சேஷ வாக​னம், யானை வாக​னம், குதிரை வாக​னம் உள்​ளிட்ட பல்​வேறு வாக​னங்​களி​லும் சுவாமி எழுந்​தருளி​னார்.

விழா​வின் 9-ம் நாளான நேற்று தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. முன்​ன​தாக, ஸ்ரீதே​வி, பூதேவி சமேத சுந்​தர​ராஜ பெரு​மாள் மூலஸ்​தானத்​திலிருந்து புறப்​பா​டாகி, கருப்​பண​சாமி சந்​நி​தி​யில் உத்​தரவு பெற்​று, காலை 8 மணி​யள​வில் தேரில் எழுந்​தருளி​னார். தொடர்ந்து தீப, தூப ஆராதனை​கள் நடை​பெற்​றன.

காலை 8.40 மணி​யள​வில் அறங்​காவலர் குழுத் தலை​வர் வெங்​க​டாசலம், அறநிலை​யத் துறை துணை ஆணை​யர் யக்ஞ நாராயணன் மற்​றும் அறங்​காவலர்​கள் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்​டத்தை தொடங்கி வைத்​தனர். ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘கோ​விந்​தா, கோவிந்​தா’ கோஷத்​துடன் தேர் இழுத்​தனர். வழியெங்​கும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். பகல் 11.55 மணி​யள​வில் தேர் நிலையை அடைந்​தது. நிகழ்ச்​சி​யில், மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்​கா, மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் ஆகியோர் பங்​கேற்​றனர்.

தேரோட்​டத்​தையொட்டி மதுரை எஸ்​.பி. அரவிந்த் தலை​மை​யில் 1,000-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். விழா​வில் பங்​கேற்க சுற்​றி​யுள்ள மாவட்​டங்​களி​லிருந்து ஏராள​மான பக்​தர்​கள் பாரம்​பரிய முறை​யில் மாட்டு வண்​டிகளில் வந்​திருந்​தனர்.

விழா நாளை நிறைவு: மாலை​யில் ஆண்​டுக்​கொரு​முறை பதினெட்​டாம்​படி கருப்​பண​சாமி கோயி​லில் நடை​பெறும் படி பூஜை, தீபா​ராதனை, சந்​தனம் சாத்​துதல் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. இரவு புஷ்ப பல்​லக்​கில் சுந்​தர​ராஜ பெரு​மாள் ஸ்ரீதே​வி, பூதேவியுடன் எழுந்​தருளி​னார். இன்று தீர்த்​த​வாரி பூஜை நடை​பெறுகிறது. நாளை உற்சவ சாந்​தி​யுடன் திரு​விழா நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x