Published : 08 Aug 2025 07:22 AM
Last Updated : 08 Aug 2025 07:22 AM

பத்மாவதி தாயார் கோயிலில் இன்று வரலட்சுமி விரத விழா

​திருப்​பதி: திருப்​ப​தியை அடுத்​துள்ள திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயி​லில் இன்று வரலட்​சுமி விரத விழா கடைபிடிக்​கப்பட உள்​ளது. இதையொட்​டி, கோயில் மாட வீதி​கள் முழு​வதும் வண்ண கோலங்​கள் தீட்​டப்​பட்டு புதுப்​பொலிவுடன் காட்​சி​யளிக்​கிறது. வரலட்​சுமி விரதத்தை முன்​னிட்டு தாயார் கோயி​லில் இன்று காலை தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை​கள் நடை​பெற உள்ளன.

காலை 10 மணி முதல் 12 மணி வரை பெண் பக்​தர்​கள் பங்​கேற்​கும் வரலட்​சுமி விரதம் கடைபிடிக்​கப்​படு​கிறது. இதில் பங்கேற்பதற்கான டிக்​கெட்​டு​கள் ஏற்​கெனவே விற்று தீர்ந்து விட்​டன. இக்​கோ​யில் மட்​டுமின்​றி, திருப்​பதி தேவஸ்​தானத்​தின் கீழ் இயங்​கும் 51 கோயில்​களி​லும் இன்று பெண்​களுக்கு மஞ்​சள், குங்​குமம், கங்​க​னம், வளை​யல்​கள், அட்​சதை பிர​சாத​மாக வழங்கப்பட உள்​ளது.

வரலட்​சுமி விரதத்​தை யொட்​டி, திருச்​சானூரில் ஆண், பெண்​களுக்​கென தனித்​தனி வரிசைகள் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. அன்ன​தானம், லட்டு பிர​சாதத்தை தாராள​மாக வழங்​க​வும் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. துப்​புரவு தொழிலா​ளர்​கள், ஸ்ரீவாரி சேவா​வினர் 24 மணி நேர​மும் பணி​யில் அமர்த்​தப்​பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x