Published : 06 Aug 2025 08:36 AM
Last Updated : 06 Aug 2025 08:36 AM

பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத ஏற்பாடு தீவிரம்

திருப்பதி: வரலட்​சுமி விரதத்தை முன்​னிட்டு திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் விழாக்​கோலம் பூண்டு வரு​கிறது. திருச்சானூர் பத்​மாவதி தாயார் கோயி​லில் வரலட்​சுமி விரதம் வரும் 8-ம் தேதி விமரிசை​யாக கொண்​டாடப்பட உள்​ளது.

இதற்​காக கோயில் முழு​வதும் வித​வித​மான மலர்​கள் மற்​றும் வண்ண விளக்​கு​களால் அலங்​காரம் செய்​யப்​பட்டு வரு​கிறது. மேலும் அலங்​கார தோரணங்​கள், பேனர்​கள், கட்​-அவுட்​கள் பொருத்​தும் பணி​களும் மாட வீதி​களில் வண்​ணக் கோலங்​கள் போடும் பணி​யும் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கிறது.

ஆண்​கள், பெண்​களுக்கு தனித்​தனி வரிசைகள், அன்​ன​தானம், குடிநீர் வசதி செய்​யப்​பட்டு வரு​கிறது. வரலட்​சுமி விரத நாளில் திருச்​சானூரில் உள்ள ஆஸ்​தான மண்​டபத்​தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை வரலட்​சுமி கலச பூஜைகள் நடை​பெற உள்​ளது.

அன்று திருப்​பதி தேவஸ்​தானத்​தின் 51 கோயில்​களி​லும் பெண் பக்​தர்​களுக்கு மஞ்​சள், குங்​குமம், வளை​யல்​கள், கங்​க​னம், லட்​சுமி அஷ்டோத்​திர புத்​தகம், அட்​சதை ஆகியவற்றை இலவச​மாக வழங்க திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​பாடு செய்​து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x