Published : 05 Aug 2025 05:25 AM
Last Updated : 05 Aug 2025 05:25 AM

சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவுகள் தீவிரம்

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 16-ம் தேதி நடை திறக்​கப்​படு​வதையொட்டி தரிசனத்​துக்​காக பக்​தர்​கள் ஆன்​லைனில் மும்முர​மாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி பூஜைக்​காக கடந்த 29-ம் தேதி நடை திறக்​கப்​பட்​டது. பின்பு 30-ம் தேதி ஒரு ​நாள் சிறப்பு வழி​பாடு நடத்தப்பட்டது.

இதில் புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு நடை சாத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில் மாதாந்​திர பூஜைக்​காக வரும் 16-ம் தேதி நடை திறக்​கப்​பட்டு 21-ம் தேதி வரை தொடர் வழி​பாடு நடை​பெற உள்​ளது. இதற்​கான ஆன்​லைன் முன்​ப​திவு​கள் சில தினங்​களுக்கு முன்பு தொடங்​கின.

மண்​டல, மகர விளக்கு பூஜை காலங்​களில் நெரிசல் அதி​கம் இருக்​கும் என்​ப​தால் பலரும் மாதாந்​திர வழி​பாடு​களில் பங்​கேற்க ஆர்​வம் காட்​டு​கின்​றனர். இதனால் தற்​போது முன்​ப​திவு​கள் மும்​முர​மாக நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x