Published : 02 Aug 2025 06:44 AM
Last Updated : 02 Aug 2025 06:44 AM

காசி - ராமேசுவரம் கோயில் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

காசி விஸ்வநாதர் கோயிலின் திரிவேணி சங்கம தீர்த்த நீரை தேவகோட்டை சமஸ்தான குடும்பத்தைச் சேர்ந்த சி.ஆர்.எம். அருணாசலம், கோவிலூர் சுவாமிகளிடம் வழங்கிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ராமேசுவரம்: உத்தர பிரதேச மாநிலத்​தில் உள்ள காசி விஸ்​வ​நாதர் கோயில், தமிழகத்​தில் உள்ள ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயில் தீர்த்​தங்​களைப் பரி​மாறிக் கொள்​வதற்​கான ஆன்​மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டது.

சாஸ்​திர மரபின்​படி, ராமேசுவரத்​தில் உள்ள ராம​நாத சுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்​வதும், காசி விஸ்வநாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்​வதும் மிக​வும் முக்​கிய​மானவை ஆகும். அதே​போல, ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யின் மணலை​யும், பிர​யாக் சங்கம மணலுடன் கலந்து வழிபடு​வதும் சாஸ்​திரங்​களில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த சாஸ்​திர மரபு​களை நடை​முறைக்​குக் கொண்டு வரு​வதற்​கு, அதாவது காசி விஸ்​வ​நாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்​ய​வும், ராமேசுவரம் ராம​நாதசு​வாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்​ய​வும் ஆன்​மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம் தேவகோட்டை சமஸ்​தானம் மூலம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்ட
கோடி தீர்த்த நீருடன் தேவகோட்டை சமஸ்தான நிர்வாகிகள்.

இதற்​காக, கடந்த ஜுலை 28-ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் காசி விஸ்​வ​நாதர் கோயி​லில் திரிவேணி சங்கம தீர்த்​தம் கொண்டு காசி விஸ்​வ​நாதருக்கு அபிஷேகம் செய்​யப்​பட்​டது. தொடர்ந்து இந்த தீர்த்த நீரை உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், தேவகோட்டை சமஸ்​தான குடும்​பத்​தைச் சேர்ந்த சி.ஆர்​.எம். அருணாசலம் மற்​றும் கோவிலூர் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, ராமேசுவரம் கோயி​லில் ராம​நாத சுவாமி மற்​றும் பர்​வதவர்​த்தினி அம்​பாளுக்கு கோடி தீர்த்த நீரால் நேற்று சிறப்பு அபிஷேகம் செய்​யப்​பட்​டு, இந்​த தீர்த்த நீர் தேவகோட்டை சமஸ்​தான குடும்​பத்​தினரிடம் வழங்​கப்​பட்​டது.

இதுகுறித்து தேவகோட்டை சமஸ்​தான குடும்​பத்​தைச் சேர்ந்த சி.ஆர்​.எம். அருணாசலம் கூறும்​போது, “ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயிலுக்கு தேவகோட்டை சமஸ்​தானம் மூலம் பல்​வேறு திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

அதன் ஒரு பகுதியாக காசி விஸ்​வ​நாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்​ய​வும், ராமேசுவரத்​தில் உள்ள ராம​நாத சுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்​ய​வும் தேவகோட்டை சமஸ்​தானம் நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது. இது, வட இந்​தியா மற்​றும் தென் இந்​தி​யா​வின் காசி-​ராமேசுவரத்தை ஆன்​மிக ஒரு​மைப்​பாடு மற்​றும் தேசப்​பற்​றின் அடிப்​படை​யில் இணைக்​கும் புதிய முயற்​சி​யாகும்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x