Published : 31 Jul 2025 05:33 AM
Last Updated : 31 Jul 2025 05:33 AM

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர் வழங்கல்

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழி​பாட்​டுக்​காக சிறப்பு பூஜை செய்​யப்​பட்​டு, பக்​தர்​களுக்கு நெற்​க​திர்​கள் பிர​சாதமாக வழங்​கப்​பட்​டன. பல்​வேறு வழி​பாடு​களுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை சாத்​தப்​பட்​டது. ஒவ்​வொரு ஆண்​டும் நெல் அறு​வடை தொடங்​கும் காலங்​களில் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழி​பாடு நடை​பெறுவது வழக்​கம்.

இந்த ஆண்​டுக்கான பூஜை நேற்று நடை​பெற்​றது. இதற்​காக, அலங்​கரிக்​கப்​பட்ட வாகனங்​களில் நேற்று முன்​தினம் நெற்க​திர்​கள் கொண்​டு​வரப்​பட்​டன. பம்பை கணபதி கோயி​லில் சிறப்பு வழி​பாட்டுக்குப் பிறகு 18-ம் படி வழியே ஐயப்​பன் சந்​நி​திக்கு தலைச்​சுமை​யாகக் கொண்டு வரப்​பட்​டன.

தந்​திரி​கள் கண்​டரரு ராஜீவரு, பிரம்​மதத்​தன் ராஜீவரு ஆகியோர் தலை​மை​யில் இந்த நெற்​க​திர்​கள் பெறப்​பட்​டன. தொடர்ந்து கொடி மரத்​துக்கு கிழக்கே உள்ள மண்​டபத்​தில் மேல்​சாந்தி அருண்​கு​மார் நம்​பூ​திரி நேற்று சிறப்பு பூஜைகள் செய்​தார். பின்பு ஐயப்​பன் சந்​நி​தி​யில் நெற்​க​திர்​கள் வைக்​கப்​பட்​டு, பூஜைகள்செய்​யப்​பட்​டன.

பின்​னர், அவை பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டன. பல்​வேறு வழி​பாடு​களுக்குப் பிறகு நேற்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்​தப்​பட்​டது. அடுத்​த​தாக ஆக. 16-ம் தேதி மாதாந்​திர பூஜைக்​காக நடை திறக்​கப்​படும் என்று தேவசம்​போர்டு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x