Published : 29 Jul 2025 05:46 AM
Last Updated : 29 Jul 2025 05:46 AM

நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

தேனி: நிறைபுத்​தரி பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் இன்று மாலை நடை திறக்​கப்பட உள்​ளது. பூஜைக்​கான நெற்கதிர்கள் இன்று அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னத்​தில் பம்​பைக்கு வர உள்​ளது.

மலை​யாள ஆண்​டின் முதல் மாதம் சிங்க மாதம் (ஆவணி) ஆகும். இந்த மாதத்​தில்​தான் கேரளா​வின் பெரிய பண்​டிகை​யான ஓணம் கொண்​டாடப்​படு​கிறது. இதற்கு முன்​ன​தாக சபரிமலை உள்​ளிட்ட பல கோயில்​களில் சுவாமிக்கு நெற்​க​திர்​களை படைத்து வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம். இது நிறைபுத்​தரி (நிறை​யும் புது அரிசி) என அழைக்​கப்​படு​கிறது.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நாளை (புதன்) அதி​காலை 5.30 மணிக்கு இந்த வழி​பாடு தொடங்க உள்​ள​தால் இன்று மாலை நடை திறக்​கப்​படு​கிறது. இதற்​காக புதி​தாக அறு​வடை செய்​யப்​பட்ட நெற்​க​திர்​கள், அச்​சன்​கோ​யில் தர்​ம​சாஸ்தா கோயி​லில் இருந்து கொண்டு வரப்​படு​கிறது. சிறப்பு வாக​னத்​தில் அலங்​கரிக்​கப்​பட்டு திருஆபரணப்​பெட்​டி​யில் இந்த நெற்​க​திர்​கள் இன்று மாலை​யில் பம்​பைக்கு வர உள்​ளது. தொடர்ந்து அங்​குள்ள கணபதி கோயி​லில் பூஜை செய்​யப்​பட்டு சபரிமலைக்கு கொண்டு செல்​லப்​படும்.

பின்பு நாளை அதி​காலை நெற்​க​திர்​கள் ஐயப்​பனுக்கு படையலிட்டு பின்பு பக்​தர்​களுக்​கும் பிர​சாத​மாக வழங்​கப்​படும். இதே​போல் இந்த நிறைபுத்​தரி பூஜை திரு​வனந்​த​புரம் பத்​ம​நாப சுவாமி கோயில், அச்​சன்​கோ​வில், ஆரி​யங்காவு தர்​ம​சாஸ்தா உள்​ளிட்ட கேரளாவின் பிரசித்தி பெற்ற தலங்​களி​லும் நடை​பெற உள்​ளது என்று தேவசம்​போர்டு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x