Published : 29 Jul 2025 05:38 AM
Last Updated : 29 Jul 2025 05:38 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். (உள்படம்) சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘கோ​விந்தா கோபாலா’ என முழங்க ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயில் ஆடிப்​பூர தேரோட்​டம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்​தனர்.

ஆண்​டாள் அவதரித்த ஆடிப்​பூர தேரோட்​டத் திரு​விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்​டாள் ரெங்​க மன்​னார் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தனர். விழாவையொட்டி தின​மும் காலை ஆடிப்​பூரக் கொட்​டகை​யில் ஆண்​டாள் ரெங்​கமன்​னாருக்கு சிறப்பு திரு​மஞ்​சன​மும், மாலை சிறப்பு அலங்​காரத்​தில் பல்​வேறு வாக​னங்​களில் வீதி உலா​வும் நடை​பெற்​றது.

ஆடிப்​பூர திரு​விழா​வின் 5-ம் நாள் காலை பெரி​யாழ்​வார் மங்​களா​சாசன​மும், இரவு 5 கருட சேவை​யும், 7-ம் நாள் விழா​வில் சயன சேவை​யும் நடை​பெற்​றன. 8-ம் நாள் விழா​வான நேற்று முன்​தினம் இரவு ரெங்​கமன்​னார் தங்​கக் குதிரை வாக​னத்​தி​லும், ஆண்டாள், பூப்​பல்​லக்​கிலும் எழுந்​தருளி வீதி உலா வந்​தனர்.

கள்ளழகர் சீர்வரிசை: நேற்று காலை ஆண்​டாள், ரெங்​கமன்​னார் ஏகாந்த திரு​மஞ்​சனம் முடிந்​து, சர்வ அலங்​காரத்​தில் ஆடிப்பூரதேரில் எழுந்​தருளினர். ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர், மதுரை அழகர்​கோ​யில் கள்​ளழகர் பெரு​மாள் சீர்​வரிசை​யாக அனுப்பிவைத்தபட்டு வஸ்​திரம் உள்​ளிட்ட மங்கலப் பொருட்​கள் ஆண்​டாள், ரெங்​க மன்​னாருக்கு அணிவிக்​கப்​பட்டு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன.

காலை 9.10 மணிக்கு அமைச்​சர்​கள் சாத்​தூர் ராமச்​சந்​திரன், தங்​கம் தென்​னரசு, மாவட்ட ஆட்​சி​யர் சுகபுத்ரா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்​டத்தை தொடங்கி வைத்​தனர். 40 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் கலந்​து​கொண்டு 7 வடங்​களைப் பிடித்து ரத வீதி​கள் வழி​யாக தேரை இழுத்​தனர். பிற்​பகல் 1 மணிக்கு தேர் நிலையை அடைந்​தது.

போலீஸ் பாதுகாப்பு: விழா​வில் எம்​.எல்​.ஏக்​கள், தங்​கப்​பாண்​டியன், ஆர்​.ஆர் சீனி​வாசன், சிவ​காசி மேயர் சங்​கீ​தா, கோட்டாட்சியர் பாலாஜி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். அறங்​காவலர் குழுத் தலை​வர் பி.ஆர். வெங்​கட்​ராம ராஜா மற்​றும் உறுப்​பினர்​கள், செயல் அலு​வலர் சர்க்​கரை​யம்​மாள் ஆகியோர் ஏற்​பாடு​களை செய்​திருந்​தனர். விருதுநகர் மாவட்ட எஸ்​.பி. கண்ணன் தலை​மை​யில் 1,200-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x