Published : 21 Jul 2025 05:19 AM
Last Updated : 21 Jul 2025 05:19 AM

ஆடி கிருத்திகையை ஒட்டி வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஆடி கிருத்திகையை ஒட்டி, வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். (உள்படம்) மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப் பெருமான். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: ஆடிக் கிருத்​தி​கையை ஒட்​டி, வடபழனி முரு​கன் கோயி​லில் திரளான பக்​தர்​கள் பால்​குடம், காவடி எடுத்து நேர்த்​திக்​கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்​தனர். மற்ற மாதங்​களில் வரும் கிருத்​திகை நட்​சத்​திரத்தை விட, ஆடி மாதத்​தில் வரும் கிருத்​திகை மிக​வும் விசேஷ​மானது. இந்த ஆண்டு ஆடி மாதத்​தில் ஜூலை 20-ம் தேதி, ஆக. 16-ம் தேதி என 2 முறை கிருத்​திகை நட்சத்​திரம் வரு​கிறது.

அந்த வகையில், முதல் ஆடிக் கிருத்​திகை நாளான நேற்று அனைத்து முரு​கன் கோயில்​களும் விழாக்​கோலம் பூண்​டிருந்​தன. சிறப்பு வழி​பாடு​கள், அபிஷேகம், ஆராதனை​கள் நடை​பெற்​றன. இதனால் அனைத்து முரு​கன் கோயில்​களி​லும் பக்​தர்​கள் கூட்டம் அலைமோ​தி​யது.

சென்​னையை பொருத்​தவரை வடபழனி முரு​கன் கோயி​லில் ஒவ்​வோர் ஆண்​டும் ஆடிக் கிருத்​திகை விழா வெகு விமரிசை​யாக நடை​பெறும். வடபழனி முரு​கன் கோயி​லில் நேற்று அதி​காலை 3 மணிக்கு நடை​திறக்​கப்​பட்​டு, 3.30 மணிக்கு பள்​ளியறை பூஜைகள் நடந்​தன. காலை 5 மணி​முதல் நண்​பகல் 12 மணிவரை சந்​தனக்​காப்பு அலங்​காரம், உச்​சி​கால அபிஷேகம் நடை​பெற்றது.

பிற்​பகல் 1 மணி​முதல் மாலை 4 மணிவரை மூல​வருக்கு ராஜ அலங்​காரம் செய்​யப்​பட்​டிருந்​தது. சாயரக் ஷை பூஜை, அபிஷேகம் முடிந்​ததும் மாலை 5 மணி​முதல் இரவு 11 மணிவரை புஷ்ப அங்கி அலங்​காரத்​தில் முரு​கப் பெரு​மான் பக்​தர்​களுக்கு அருள்​பாலித்தார். தொடர்ந்து இரவு, வள்​ளி, தேவசேனா சமேத​ராக சுப்​பிரமணிய சுவாமி மாட வீதி​களில் வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

ஆடிக் கிருத்​தி​கையை முன்​னிட்டு அதி​காலை முதலே வடபழனி முரு​கன் கோயி​லில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. ஏராளமான பக்​தர்​கள், பால் குடம் ஏந்​தி, காவடி எடுத்​து, அலகு குத்தி வேண்​டு​தலை நிறைவேற்​றினர். முதி​யோர், கர்ப்​பிணி​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனி வழி ஏற்​படுத்​திக் கொடுக்​கப்​பட்​டது. அதே​போல் காவடி, பால் குடம், அலகு குத்தி வரும் பக்​தர்​களுக்​கும் தனி வழி அமைக்​கப்​பட்​டிருந்​தது.

விழாவையொட்டி போலீ​ஸார் பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்​திருந்​தனர். இதே​போல பாரி​முனை கந்​தகோட்​டம், குரோம்​பேட்டை குமரன்குன்​று, குன்​றத்​தூர் முரு​கன், பெசன்ட்​நகர் அறு​படை வீடு முரு​கன், வானகரம் மச்​சக்​கார சுவாமி​நாத பால​முரு​கன் ஆகிய கோயில்​களி​லும் ஆடிக் கிருத்​தி​கை​யையொட்டி சிறப்பு அபிஷேக அலங்​கார பூஜைகள் நடந்​தன.

ஆக.16-ம் தேதி வரும் ஆடிக் கிருத்​திகை நாளில் முருகன் கோயில்​களில் நேற்​றைய தினத்தை விட பக்​தர்​கள் கூட்​டம்​ மேலும்​ அதி​க​மாக காணப்​படும்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x