Published : 19 Jul 2025 05:37 AM
Last Updated : 19 Jul 2025 05:37 AM

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, மயிலாப்பூர், முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் பெண்கள் சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: ஆடி முதல் வெள்​ளிக்கிழமையை ஒட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்​களில் நேற்று பக்​தர்​கள் சிறப்பு வழிபாட்​டில் ஈடு​பட்​டனர். ஆடி மாதம் அம்​மனுக்கு உகந்த மாத​மாக கருதப்​படு​கிறது. ஆடி வெள்​ளிக்​கிழமை அம்​மனை வழிபட்டால், எல்லா வளங்​களும் இல்​லம் தேடி வரும் என்​பது நம்​பிக்​கை.

அந்​த வகை​யில், இந்​தாண்டு ஆடி மாதம் தொடங்​கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருந்​தது கூடு​தல் சிறப்​பு. ஆடி முதல் வெள்ளியான நேற்று சென்னை அம்​மன் கோயில்​களில் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற்​றன.

மயி​லாப்​பூர் முண்​டகக்​கண்ணி அம்​மன் கோயி​லில் நேற்று காலை முதல் ஏராள​மான பெண்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து அம்​மனை தரிசனம் செய்​தனர். பால் குடம் எடுத்து ஊர்​வல​மாக வந்​தனர். மேலும், கோயில் வளாகத்​தில் இருந்த நாக சிலைகளுக்கு பெண்​கள் பாலாபிஷேகம் செய்​தும், பொங்​கலிட்​டும் வழிபட்​டனர்.

பாரி​முனை தம்பு செட்டி தெரு​வில் உள்ள காளி​காம்​பாள் கோயி​லில் ஆடி முதல் வெள்​ளியை முன்​னிட்டு அம்​மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்​கார பூஜைகள் நடை​பெற்​றன. பெண்​கள் தீபம் ஏற்றி அம்​மனை வழிபட்​டனர். திரு​வொற்​றியூர் வடிவுடை​யம்​மன் கோயி​லில் காலை​யில் வடிவுடை​யம்​மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர் அலங்​கார பூஜைகள் நடை​பெற்​றன.

இதே​போல், மயி​லாப்​பூர் கோல​விழி அம்​மன், தி.நகர் முப்​பாத்​தம்​மன், பாடி படவேட்​டம்​மன், வில்​லி​வாக்​கம் பாலி அம்​மன், கொரட்டூர் முத்​து​மாரி​யம்​மன், பாடியநல்​லூர் அங்​காளபரமேஸ்​வரி, பெரம்​பூர் லட்​சுமி அம்​மன், சூளை அங்​காளம்​மன், கீழ்ப்​பாக்கம் பாதாள பொன்​னி​யம்​மன், பெரிய​பாளை​யம் பவானி அம்​மன், திரு​முல்​லை​வாயல் பச்​சை​யம்​மன், திரு​வேற்​காடு தேவி கரு​மாரியம்​மன் உட்பட சென்னை மற்​றும் புறநகரில் உள்ள அம்​மன் கோயில்​களில் ஆடி வெள்​ளியையொட்​டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அனைத்து கோயில்​களி​லும் காலை முதல் பக்​தர்​கள் கூட்​டம் அலை மோ​தி​யது. பல கோயில்​களில் தீமிதி திரு​விழாக்​கள் நடத்தப்பட்​டன. பக்​தர்​கள் மஞ்​சள் நிறை ஆடைகளை அணிந்​து, தீச்​சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆடி வெள்ளியை முன்னிட்​டு, பல கோயில்​கள் வேப்பிலை, எலுமிச்சை பழங்​களால் கோயில் முகப்பு வடிவ​மைக்​கப்பட்​டிருந்​தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்ய வசதி​யாக தடுப்​பு​களால்​ பாதை அமைக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x