Published : 17 Jul 2025 06:10 AM
Last Updated : 17 Jul 2025 06:10 AM

கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். | படங்கள்: ம.பிரபு |

சென்னை: கந்​தகோட்​டம் முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. ராஜகோபுரக் கலசத்​தில் புனிதநீர் ஊற்​றப்​பட்​டது. அப்​போது ‘அரோக​ரா’ கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

சென்னை பூங்கா நகர் கந்​தகோட்​டத்​தில் நூற்​றாண்டு பழமை​யான முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் உள்​ளது. இக்​கோயிலில்வள்ளி, தேவசேனா உடனுறை முத்​துக்​கு​மாரசு​வாமி எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து வரு​கிறார். கடந்த 2013-ம் ஆண்​டும் ஜூலை 15-ம் தேதி இக்​கோயி​லில் கும்​பாபிஷேகம் நடந்​தது. கும்​பாபிஷேகம் நடந்து 12 ஆண்​டு​கள் முடிவடைந்த நிலையில், கந்​தகோட்​டத்​தில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் கும்​பாபிஷேகம் நடத்து​வதற்​கான பணி​கள் நடை​பெற்று வந்​தன.

அந்த வகை​யில், கோயில் நிதி மற்​றும் உபய​தா​ரர் நிதி ரூ.91.50 லட்​சம் மதிப்​பீட்​டில் கோயில் ராஜகோபுரம், அனைத்து சந்​நி​தி​கள், மண்​டபங்​கள் புனரமைக்​கப்​பட்​டன. தொடர்ந்து கடந்த 10-ம் தேதி விக்​னேஸ்வர பூஜை​யுடன் யாக சாலை பூஜைகளு​டன் கும்​பாபிஷேக விழா தொடங்​கியது. தொடர்ந்​து, பிர​வேச பலி, கோ பூஜை, புண்​ணி​யாக வாசனம், எஜமானர் சங்​கல்​பம், கும்பலங்காரம், கலாகர்​ஷணம், தீபா​ராதனை​கள் நடந்​தன.

3,386 கோயில்களில்.. இந்​நிலை​யில் கும்​பாபிஷேகம் நேற்று விமரிசை​யாக நடை​பெற்​றது. காலை 7 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, அவபிருத​யாகம், மஹா பூர்​ணாஹு​தி, தீபா​ராதனை நடந்​தது. பின்​னர், காலை 9.30 மணிக்கு கலசங்​கள் புறப்​பாடு நடந்​தது. தொடர்ந்​து, ராஜகோபுரக் கலசத்​தில் புனிதநீர் ஊற்​றப்​பட்​டது. அப்​போது, ‘வெற்​றிவேல் முரு​க​னுக்கு அரோக​ரா, கந்​தனுக்கு அரோக​ரா’ என பக்​தர்​கள் கோஷங்​களை எழுப்​பினர். கோபுரக் கலசத்​தில் ஊற்​றப்​பட்ட புனிதநீர் பக்​தர்​கள் மீது தெளிக்​கப்​பட்​டது.

இதையடுத்து மூல​வர் முத்​துக்​கு​மாரசு​வாமிக்கு மஹா கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. இவ்​விழா​வில் இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு, மேயர் பிரியா மற்​றும் திரளான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு இது​வரை 3,386 கோயில்​களில் கும்​பாபிஷேகம் நடை​பெற்​றுள்​ளது எனவும், அதில் 131 கோயில்​கள் முருகன் கோயில்​கள் எனவும்​ அமைச்​சர்​ பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x