Published : 15 Jul 2025 12:18 AM
Last Updated : 15 Jul 2025 12:18 AM

‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தைக் காண கிரிவீதியில் அதிகாலையில் திரண்டிருந்த பக்தர்கள். (உள்படம்) நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ராஜகோபுர தங்க கலசங்களில் புனித நீர் ஊற்றிய சிவாச்சாரியார்கள். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள், ‘அரோக​ரா, அரோக​ரா’ என பக்தி முழக்​கமிட்டு தரிசனம் செய்​தனர்.

முரு​கப்​பெரு​மானின் முதல்​படை வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில்கும்​பாபிஷேகம் நடத்த முடிவு செய்​யப்​பட்டு திருப்​பணி​கள் தொடங்​கப்​பட்​டன. ரூ.2 கோடியே 44 லட்​சம் மதிப்​பில் ராஜகோபுரத்​தில் 7 தங்​கக்​கலசம், கோவர்த்​த​னாம்​பிகை சந்​நிதி விமானம், வல்லப கணபதி கோயில் விமானம் ஆகிய​வற்றை புதுப்​பிக்​கும் பணி​கள் நடை​பெற்​றன. உபய​தா​ரர்​கள் மூல​மும் பல கோடி ரூபாய் செல​வில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. பணி​கள் நிறைவடைந்​ததைத் தொடர்ந்து ஜூலை 14-ம் தேதி கும்​பாபிஷேகம் நடத்த முடி​வெடுக்​கப்​பட்டு அதற்​கான பணி​கள் தொடங்​கின.

தமிழ் வேதங்​கள் முற்​றோதல்: அதன்​படி, ஜூலை 10-ம் தேதி மாலை வள்ளி தேவசேனா மண்​டபத்​தில் 75 யாக குண்​டங்​கள் அமைத்து 200 வாச்​சா​ரி​யார்​கள் வேத மந்​திரங்​கள் முழங்க முதல்​கால யாக பூஜை தொடங்​கியது. இரண்​டாம் நாள், மூன்​றாம் நாள், நான்​காம் நாள் என காலை, மாலை யாக பூஜைகள் நடை​பெற்​றன. வேத சிவாகமத்​துடன் பெண் ஓது​வார்​கள் உட்பட 80 ஓது​வார்​கள் பன்​னிரு திரு​முறை​கள், திருப்​பு​கழ் கந்​தர் அனுபூதி ஆகிய செந்​தமிழ் வேதங்​களை முற்​றோதுதல் செய்​தனர்.

நேற்று முன்​தினம் இரவு 10 மணி​யள​வில் மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லிலிருந்து மீனாட்​சி, சுந்​தரேசுவரர் பரி​வார மூர்த்​தி​களு​டன் புறப்​பட்​டனர். நேற்று அதி​காலை திருப்​பரங்​குன்​றம் வந்த மீனாட்​சி, சுந்​தரேசுவரருக்கு திருப்​பரங்​குன்​றம் 16 கால் மண்​டபத்​தில்வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. நள்​ளிர​விலேயே மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்து திரளான பக்​தர்​கள் திருப்​பரங்​குன்​றத்​தில் குவிந்​தனர். சந்​நிதி வீதி, கிரி வீதி, சரவணப்​பொய்கை என திரும்​பிய பக்​கமெல்​லாம் பக்​தர்​கள் வெள்​ள​மாகக் காட்​சி​யளித்​தது.

ஐந்​தாம் நாள் நிகழ்ச்​சி​யாக கும்​பாபிஷேகத்தை முன்​னிட்டு நேற்று (ஜூலை 14) அதி​காலை 3.45 மணிக்கு எட்​டாம் கால யாகபூஜை நடை​பெற்​றது. அதி​காலை 5 மணி​யள​வில் யாக​சாலை​யில் வைத்து பூஜிக்​கப்​பட்ட கடங்​கள் புறப்​பாடு நடை​பெற்​றது.

புனித நீர் தெளிப்பு: இந்​துசமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் சேகர்​பாபு, வணிக வரித் துறை அமைச்​சர் பி.மூர்த்தி ஆகியோர் ராஜகோபுரத்​தில் ஏறி பச்​சைக்​கொடியை அசைத்​தனர். அதைத் தொடர்ந்து அதி​காலை 5.31 மணி​யள​வில் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், பரி​வார மூர்த்​தி​கள், கோவர்த்​த​னாம்​பிகை, வல்லப கணபதி ஆகியவிமானங்​களுக்கு புனித நீர் ஊற்றிகும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

அப்​போது பக்தி பரவசத்​தில் ‘அரோக​ரா... அரோக​ரா’ என விண்​ண​திர பக்​தர்​கள் முழக்​கங்​களை எழுப்​பினர். கும்பாபிஷேகம் முடிந்​தவுடன் 10 ட்ரோன்​கள் மூலம் புனித நீர் பக்​தர்​கள் மீது தெளிக்​கப்​பட்​டது. கும்​பாபிஷேகத்​தில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்து​கொண்டு தரிசனம் செய்​தனர். ஆயிரக்​கணக்​கானோருக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது.

3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு: இவ்​விழா​வில் மதுரை மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, ராஜன்​செல்​லப்பா எம்​எல்ஏ உள்​ளிட்​டோர்பங்​கேற்​றனர். மாநகர காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன் தலை​மை​யில் 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட்​டனர்.

கும்​பாபிஷேக ஏற்​பாடு​களை கோயில் அறங்​காவலர் குழுத் தலை​வர் ப.சத்​யபிரியா தலை​மை​யில் கோயில் துணை ஆணை​யர் சூரிய​நா​ராயணன், அறங்​காவலர்​கள் மணிச்​செல்​வன், சண்​முகசுந்​தரம், பொம்​மதேவன், ராமையா மற்​றும் கோயில் பணி​யாளர்​கள் செய்​திருந்​தனர். திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகத்​தை முன்னிட்டு ராஜகோபுரத்​தில் உள்ள கலசத்​திற்கு புனித நீர் ஊற்றப்​பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x