Published : 09 Jul 2025 12:36 AM
Last Updated : 09 Jul 2025 12:36 AM

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

திருநெல்வேலியில் நடைபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். (உள்படம்) தேரில் பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளிய நெல்லையப்பர். படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: நெல்​லை​யில் நேற்று நெல்​லை​யப்​பர் கோயில் 519-வது ஆனிப் பெருந்​திரு​விழா தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர்.

நெல்​லை​யப்​பர் கோயி​லில் கடந்த 30-ம் தேதி ஆனிப் பெருந்​திரு​விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. விழா நாட்​களில் காலை, மாலை நேரங்​களில் பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி, அம்​பாள் வீதி​யுலா நடை​பெற்​றது. விழா​வின் 8-ம் நாளான நேற்​று​முன்​ தினம் காலை நடராஜப் பெரு​மாள் திரு​வீதி உலா, மாலை​யில் சுவாமி கங்​காள​நாதர் தங்க சப்​பரத்​தில் வீதி​யுலா, இரவு சுவாமி தங்க கைலாச பர்வத வாக​னத்​தி​லும், அம்​பாள் தங்​கக்​கிளி வாக​னத்​தி​லும் திரு​வீ​தி​உலா நடை​பெற்​றது.

விழா​வின் 9-ம் நாளான நேற்று முக்​கிய நிகழ்ச்​சி​யான தேரோட்​டம் நடை​பெற்​றது. இதையொட்​டி, அதி​காலை சுவாமி, அம்​பாள் தேரில் எழுந்​தருளினர். தொடர்ந்​து,சுவாமி, அம்​பாள் மற்​றும் பரி​வார தெய்​வங்​களுக்கு சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. காலை 8 மணிக்கு சட்​டப்​பேரவைத் தலை​வர் மு.அப்​பாவு, அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு, ஆட்​சி​யர் ஆர்​.சுகு​மார், ராபர்ட் புரூஸ் எம்​.பி. தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், எம்​எல்​ஏக்​கள் அப்​துல்​வ​காப், ரூபிமனோகரன், மேயர் கோ.​ராமகிருஷ்ணன், மாநக​ராட்சி ஆணை​யர் மோனிகா ராணா, காவல் ஆணை​யர் சந்​தோஷ் ஹாதி​மணி உள்​ளிட்​டோர் வடம்​பிடித்து தேரோட்​டத்தை தொடங்கி வைத்​தனர்.

விநாயகர், சுப்​பிரமணி​யர், சுவாமி, அம்​பாள், சண்​டிகேஸ்​வரர் தேர்களை பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வடம்​பிடித்து இழுத்​தனர். இதையொட்டி, 1,000-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப்பணி​யில் ஈடு​பட்​டனர். மேலும், 3 ட்ரோன் கேம​ராக்​கள் மற்​றும் 300 கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் மூலம் கண்​காணிக்​கப்​பட்​டது.நெல்லை மாவட்​டத்​துக்கு நேற்று உள்​ளூர் விடுமுறை அளிக்​கப்​பட்​டிருந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x