Published : 03 Jul 2025 01:15 AM
Last Updated : 03 Jul 2025 01:15 AM

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘சிவ சிவ’ முழக்கத்துடன் நடராஜ பெருமானை தரிசித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ நிகழ்வு கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு ரதஙகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இரவு தேரில் இருந்து மேள​தாளம் முழங்க கோயிலுக்கு வந்த ஸ்ரீ சிவ​காமசுந்​தரி அம்​பாள் சமேத நடராஜ மூர்த்​திக்கு ஏககால லட்​சார்ச்​சனை நடை​பெற்​றது.

இதைத்​தொடர்ந்து முக்​கிய திரு​விழா​வான ஆனித் திரு​மஞ்சன தரிசன விழா நேற்று நடை​பெற்​றது. அதி​காலை 4 மணி தொடங்கி 6 மணி வரை ஆயிரங்​கால் மண்டப முகப்பு பகு​தி​யில் சுவாமிக்​கும் அம்​பாளுக்​கும் மகா அபிஷேகம் நடை​பெற்​றது. காலை 10 மணிக்கு சித்​சபை​யில் ரகசிய பூஜை​யும், பின்​னர் பஞ்​சமூர்த்​தி​கள் வீதி உலா​வும் நடந்​தது.

ஆயிரங்​கால் மண்​டபத்​தில் சுவாமி​யும், அம்​பாளும் திரு​வாபரண அலங்​காரத்​தில் பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தனர். அதனை தொடர்ந்து பிற்​பகல் 2.50 மணிக்கு ஆனித் திரு​மஞ்சன தரிசனம் நடை​பெற்​றது. ஆயிரங்​கால் மண்​டத்​தில் இருந்து தீவட்டி முன்னே செல்ல, மேள​தாளங்​கள், வேத மந்​திரங்​கள் முழங்க, ஓது​வாமூர்த்​தி​கள் தேவாரம், திரு​வாசகம் பாட, நடராஜரும், சிவ​காமசுந்​தரி அம்​பாளும் முன்​னுக்​கும், பின்​னுக்​கும் சென்று நடன​மாடியபடியே பக்​தர்​களுக்கு தரிசனம் தந்​த​படியே சித்​சபைக்கு பிர​வேசம் செய்​தனர்.

முத்​துப்​பல்​லக்கு வீதி உலா​: இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். இன்று (ஜூலை.3) பஞ்​சமூர்த்தி முத்​துப்​பல்​லக்கு வீதி உலா​வுடன் திரு​விழா நிறைவடைகிறது. இதற்​கான ஏற்​பாடு​களை கோயில் பொது தீட்​சிதர்​கள் செய்​திருந்​தனர். திரு​விழாவை முன்​னிட்டு நான்கு வீதி உள்​ளிட்ட இடங்​களில் பல்​வேறு அமைப்​பு​கள் சார்​பில் அன்​ன​தானம் அளிக்​கப்​பட்​டது.

ஆனித் திரு​மஞ்​சனத்தை யொட்டி கடந்த இரு நாட்​களாக சிதம்​பரம் நகரமே விழாக்கோலம் பூண்​டிருந்​தது. கடலூர் எஸ்​பி. எஸ். ஜெயக்​கு​மார் தலை​மை​யில் சிதம்​பரம் டிஎஸ்பி லாமேக் மற்​றும் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார்​ பாது​காப்​பு பணி​யில்​ ஈடு​படு​பட்​டுள்​ளனர்​.சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x