Published : 29 Jun 2025 06:16 AM
Last Updated : 29 Jun 2025 06:16 AM
மூலவர்: ராமலிங்க சுவாமி அம்பாள்: பர்வதவர்த்தினி தல வரலாறு : இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேசுவரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து அயோத்தி திரும்பினார். கரண், தூஷணன் ஆகிய அசுர சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும். தங்களை பின்தொடர்வதை உணர்ந்தார். அந்த தோஷம் நீங்க சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக இங்கு 107 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். அப்போது ஆஞ்சநேயரை காசிக்குஅனுப்பி ஒரு லிங்கம் கொண்டு வரச் செய்தார். அதையும் சேர்த்து108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான் தன் தோஷம் நீங்கப் பெற்றார். பிரதான ஈசனுக்கு, ராமரின் பெயரால், ‘ராமலிங்க சுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் அனுமந்தலிங்கம் என்ற பெயரில் உள்ளது. பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சந்நிதி எழுப்பப்பட்டது.
கோயில் சிறப்பு: கோயில், 108 லிங்கங்கள் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. பிரதோஷ வேளையில் அகத்தியர் பூஜை செய்வதாக ஐதீகம். கழுத்தில் சலங்கைகள் அணிந்து ஈசனை நேராக பார்த்து கொண்டிருக்கும்படி காமதேனுவின் சிலை வடிக்கப்பட்டுள்ளது.சிறப்பு அம்சம்: ராமலிங்க சுவாமி சந்நிதி விமானம் ராமேசுவரம் கோயில் அமைப்பிலும், அனுமந்தலிங்க சந்நிதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளன.
அனுமன், சுக்ரீவன், ராமபிரான் பாவம் நீங்கப் பெற்றதால் இத்தலத்துக்கு ‘பாபநாசம்’ என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேசுவரம் என்ற பெயரும் உண்டு. கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில் என்பது தனிச்சிறப்பு. பிரார்த்தனை: அறியாமல் செய்த பாவம், பித்ரு தோஷம் நீங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. அமைவிடம்: தஞ்சாவூர் - குடந்தை செல்லும் வழியில் 25 கிமீ தூரத்தில் பாபநாசம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30-12.30, மாலை 4.00-6.30 வரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT