Published : 22 Apr 2025 06:49 AM
Last Updated : 22 Apr 2025 06:49 AM

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சந்தீப் நாராயண் இசை நிகழ்ச்சி: உற்சாகத்துடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள்

சென்னை: மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் விடை​யாற்றி விழா​வில் சந்​தீப் நாராயண் குழு​வினரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.

சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான பங்​குனி பெரு​விழா கடந்த 3-ம் தேதி தொடங்​கியது. முக்​கிய நிகழ்​வு​களான தேரோட்​டம் கடந்த 9-ம் தேதி​யும், அறு​பத்து மூவர் விழா 10-ம் தேதி​யும் நடை​பெற்​றன.

இதன்​பிறகு, 14-ம் தேதி விடை​யாற்றி தொடங்​கியது. இதில், இசை, நாட்​டி​யம் என பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த 20-ம் தேதி பிரபல கர்​னாடக இசைக் கலைஞர் சந்​தீப் நாராயண் குழு​வினரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. அனந்த கிருஷ்ணன் (வயலின்), நெய்​வேலி வெங்​கடேஷ் (மிருதங்​கம்), அனிருத் ஆத்​ரேயா (கஞ்​சி​ரா)ஆகியோர் பக்​க​வாத்​தி​யம் வாசித்​தனர்.

பாப​நாசம் சிவன் கிருதிகள்: இந்த நிகழ்ச்​சி​யில், ‘வரு​வாரோ வரம் தரு​வாரோ’, ‘இன்​பம்வந்​தா​லும் என்ன துன்​பம் வந்​தா​லும்’, ‘காரணம் கேட்டு வாடி சகி’மற்​றும் மயிலை கபாலீஸ்​வரர் மீதுபாப​நாசம் சிவன் பாடி​யிருக்​கும்அரிய கிரு​தி​களான ‘கருணாகரனே சிவசங்​கரனே’, ‘கபாலி கருணை நிலவு பொழி​யும் வதனம்’ என்​பது உள்​ளிட்ட இறை அனுபூ​தி​யுடன் கூடிய பாடல்​களை சந்​தீப் நாராயண் பாடி​னார். கோயிலுக்கு வந்​திருந்த பக்​தர்​கள் உற்​சாகத்​துடன் கேட்டு மகிழ்ந்​தனர். விடை​யாற்றி விழா 25-ம்​ தேதி வரை நடை​பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x