Published : 19 Apr 2025 06:26 AM
Last Updated : 19 Apr 2025 06:26 AM
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் வரும் 26-ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னிகள் என 2 மனைவிகளுடன் தனி சந்நிதியில் வீற்றிருந்து மங்கள குருவாக அருள்பாலித்து வருகிறார். இவரது திருமேனியில் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பால் நீல நிறமாக மாறும். இத்தகைய சிறப்பு பெற்ற ராகுபகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பின்னோக்கி நகர்வார்.
அதன்படி, ராகு பகவான் வரும் 26-ம் தேதி மாலை 4.20 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். இதையொட்டி, அன்று மாலை ராகு பகபவானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனையும், அதன்பின் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் தா.உமாதேவி, அறங்காவலர் குழுத் தலைவர் சி.சிவகுருநாதன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT