Published : 10 Mar 2025 06:30 AM
Last Updated : 10 Mar 2025 06:30 AM

ராமகிருஷ்ண சர்வ சமய கோயி​லின் வெள்ளி விழா: மார்ச் 23-ம் தேதி கொண்​டாட்​டம்

சென்னை: சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ண சர்வ சமய கோயிலின் வெள்ளி விழா கொண்டாட்டம் மார்ச் 23-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணரின் சர்வ சமய கோயில் கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த கோயில் கட்டப்பட்டு 25 ஆண்டுகளான நிலையில், ராமகிருஷ்ண மடம் சார்பில் மார்ச் 23-ம் தேதி வெள்ளி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

இதையொட்டி, மார்ச் 17-ம் தேதி ஸ்ரீருத்ர பாராயணம், 18-ம் தேதி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 19-ம் தேதி ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம், பள்ளி மாணவர்களின் பஜனை, 20-ம் தேதி அகண்ட நாம ஜபம், 21-ம் தேதி தேவாரம், திருவாசகம், 108 பக்தர்கள் கலந்து கொள்ளும் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து, 22-ம் தேதி ராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுக்கூட்டம், புதுப்பிக்கப்பட்ட பல் மருத்துவ பிரிவு மற்றும் மருந்தக திறப்பு விழா, நினைவு மலர் வெளியீடு, துறவிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ராமகிருஷ்ண சர்வ சமய கோயிலின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் முக்கிய நாளான மார்ச் 23-ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் ஸ்ரீ ஸ்ரீசண்டி ஹோமம், 11.45 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு திருச்சூர் சகோதரர்களின் இசைக் கச்சேரி, இரவு 7 மணிக்கு ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மஹராஜின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x