Published : 28 Feb 2025 06:44 AM
Last Updated : 28 Feb 2025 06:44 AM
மாமல்லபுரம்: திருக்கழுகுன்றத்தை அடுத்த விளாகம் கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றிஸ்வரர் கோயில் குளத்தின் நன்னீரில், சிவராத்திரி நாளில் சங்கு பிறந்ததால், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரில் கண்டு வழிபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியம் விளாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.
இந்நிலையில், கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கோயில் குளத்தின் கரையில் சங்கு ஒலிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, கோயில் பணியாளர்கள் குளத்துக்கு சென்று பார்த்தப்போது நன்னீரில் சங்கு ஒன்று படிக்கட்டு நீரில் மிதந்துள்ளது. இதையடுத்து, ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சங்கை பத்திரமாக எடுத்து ஒரு தட்டில் தண்ணீர் நிரப்பி அதில் வைத்தனர்.
பின்னர், கோயிலுக்கு எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். நன்னீரில் சங்கு பிறந்துள்ளதை அப்பகுதி அறிந்த கிராம மக்கள், ஆர்வத்துடன் கோயிலுக்கு வந்து சங்கை வழிபட்டனர்.
திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் சந்நிதி வீதியில் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நன்னீரில் சங்கு பிறப்பது ஐதீகமாக கருதப்படுகிறது. மேலும், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த சங்கை வடமாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT