Published : 19 Feb 2025 05:44 AM
Last Updated : 19 Feb 2025 05:44 AM

திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசிக்க டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதம் தரிசனம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவுக்கான தேதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதன்படி பிப். 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டோர் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட் பெறலாம். மே மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் வெளியாகிறது.

22-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன்களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்களும் பிற்பகல் 3 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான டிக்கெட்களும் வெளியாக உள்ளன. 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பெறலாம். மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x